MI vs GT.. கப்ப இப்பவே குடுத்துடுங்கப்பா.. மும்பையின் அதிரடியான உத்தேச பிளேயிங் XI

0
709
MI

நாளை ஐபிஎல் தொடரில் மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு அணிகளுமே சரிசமமான பலத்தில் இருக்கின்ற காரணத்தினால் போட்டி பலமாக இருக்கும்.

இரவு நடைபெறும் இன்னொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருப்பதும், நாளைய போட்டிக்கான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்டு கோட்ஸி 5 கோடி, தில்ஷன் மதுஷங்கா 4.60 கோடி, ஷ்ரேயாஸ் கோபால் 20 லட்சம், நுவான் துஷாரா 4.80 கோடி, நமன் திர் 20 லட்சம், அன்ஷுல் காம்போஜ் ரூ. 20 லட்சம், முகமது நபி 1.5 கோடி மற்றும் ஷிவாலிக் சர்மா 20 லட்சம் ஆகியோரை வாங்கி இருந்தது.

மாஸ் காட்டும் பிளேயிங் லெவன்

நாளை குஜராத் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. வழக்கம்போல் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். மூன்றாவது இடத்தில் டிவால்ட் பிரிவியஸ், நான்காவது இடத்தில் திலக் வர்மா, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் நெகில் வதேரா மற்றும் டிம் டேவிட் இருப்பார்கள்.

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரொமரியோ செப்பர்டு இருவரும் இருப்பார்கள். ஒன்பதாவது இடத்தில் ஸ்பின்னர் பியூஸ் சாவ்லா, பத்தாவது மற்றும் பதினொன்றாவது இடத்தில் பும்ரா மற்றும் ஆகாஷ் மத்வால் இருப்பார்கள்.

- Advertisement -

இந்த அணியில்மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருப்பதால், இம்பேக்ட் பிளேயர் இடத்தில் இலங்கை அணியின் நுவன் துசாரா இல்லையென்றால் தென் ஆப்பிரிக்காவில் ஜெரால்டு கோட்சி இருவரில் ஒருவர் இடம் பெறுவார். எட்டாம் இடம் வரைக்கும் வலிமையான பேட்ஸ்மேன்களும், போட்டியின் எல்லாப் பகுதியிலும் பந்து வீசக்கூடிய ஆறு பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். இந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடப்பாரை அணியாகத் தெரிகிறது. கோப்பையை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகளும் இருக்கிறது என்று கூறலாம்.

இதையும் படிங்க : கடைசி ஐந்து ஓவர் 85 ரன்.. 20 பந்தில் ரசல் ருத்ர தாண்டவம்.. நடராஜன் மாஸ் கம்பேக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :

இஷான் கிஷான், ரோஹித் சர்மா, டிவால்ட் பிரிவியஸ், திலக் வர்மா, நெகேல் வதேரா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா, ரொமரியோ செப்பர்டு, பியூஸ் சாவ்லா, பும்ரா மற்றும் ஆகாஷ் மத்வால். இம்பேக்ட் பிளேயர்கள் நுவன் துஷாரா இல்லை ஜெரால்ட் கோட்சி