கடைசி ஐந்து ஓவர் 85 ரன்.. 20 பந்தில் ரசல் ருத்ர தாண்டவம்.. நடராஜன் மாஸ் கம்பேக்

0
411
Natarajan

இன்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. கொல்கத்தா அணி ஆச்சரியப்படுத்தும் விதமாக சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரைனை துவக்க வீரராக அனுப்பியது. அவர் இரண்டு ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 0 என இருவரது விக்கெட்டையும் அடுத்தடுத்து நடராஜன் கைப்பற்றி வெளியே அனுப்பினார். இதற்கு அடுத்து நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டம் ஆட்டம் இழந்தார். கொல்கத்தா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ரிங்கு சிங்கை வைத்துக்கொண்டு, வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரமன் தீப் சிங்கை அனுப்பினார்கள். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் எடுத்தார். துவக்க வீரராக வந்த பில் சால்ட் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்.

ருத்ர தாண்டவம் ஆடிய ரசல்

இதற்கு அடுத்து அதிரடி வீரர்கள் ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரூ ரசல் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். ரசல் அதிரடியில் மிரட்ட ஆரம்பிக்க ரிங்கு சிங் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிறப்பாக விளையாடிய ரசல் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினார். புவனேஸ்வர் குமார் வீசி ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 25 ரன்கள் நொறுக்கி தள்ளினார்.

- Advertisement -

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரசல் 20 பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டினார். 19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்திருந்தது. இருபதாவது ஓவரை வீச வந்த நடராஜன் முதல் பந்திலேயே ரிங்கு சிங்கை வெளியில் அனுப்பினார். தொடர்ந்து அந்த ஓவரை சிறப்பாக வீசிய அவர் மொத்தம் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். ஒட்டுமொத்த ஹைதராபாத் பவுலிங் யூனிட் அடி வாங்க, நடராஜன் நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே-க்கு திரும்பிய பதிரனா.. ஆட்டநாயகன் முஸ்தஃபிசூர் நீக்கப்படுவாரா? என்ன மாற்றங்கள் நடக்கும் – முழு அலசல்

இறுதி வரை களத்தில் நின்ற ரசல் 25 பந்தில் 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் குவித்தார். ரசல் மற்றும் ரிங்க்டோசிங் ஜோடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் கொல்கத்தா அணி கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 85 ரன்கள் அதிரடியாக அடித்து ஹைதராபாத் அணியை பின்னால் தள்ளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.