ஆர்சிபி தோல்வி.. ஆனாலும் விராட் கோலி ஹர்திக் பாண்டியாவுக்காக செய்த காரியம்.. களத்தில் நெகிழ்ந்த ரசிகர்கள்

0
3438
Virat

இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மும்பையில் வைத்து 15.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான முறையில் வென்று இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு இந்த போட்டியிலும் ஒரு படுதோல்வி அமைந்தது. ஆனாலும் விராட் கோலி களத்தில் செய்த ஒரு காரியம் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது..

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு இந்த முறை விராட் கோலியால் பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு செய்ய முடியவில்லை. அவர் 9 பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஆரம்பத்திலேயே வெளியேறியதுமே இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்வி உறுதி என்பதாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் பாப் டு பிளிசிஸ் 61, ரஜத் பட்டிதார் 50, தினேஷ் கார்த்திக் 52 ரன்கள் எடுத்தார்கள். ஆர்சிபி என் 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. பும்ரா நான்கு ஓவர்களில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆர்சிபி அணியை பெரிய ரன்களுக்கு செல்ல விடாமல் தடுத்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இசான் கிஷான் 34 பந்தில் 69 ரன்கள், சூரியகுமார் யாதவ் 19 பந்தில் 52 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளை சந்தித்து ஆட்டம் இழக்காமல் 21 ரன்கள் எடுத்தார். அவர் விளையாட வந்த பொழுது இந்த முறையும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சல் எழுப்பினார்கள். மும்பை அணி சிறப்பாக செயல்பட்ட போதும் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க: 15.3 ஓவர்.. இஷான் கிஷான் சூரியகுமார் காட்டடி.. மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபி-யை அசால்டாக வென்றது

இந்த நேரத்தில் பவுண்டரி எல்லையில் பீல்டிங்கில் நின்ற விராட் கோலி ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கத்த வேண்டாம் என்றும், அவர் இந்தியாவுக்காக விளையாடும் நம்முடைய வீரர் என்றும், எனவே அவருக்கு ஆதரவாக இருக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இதற்கு அடுத்து அவருக்கு எதிராக கத்தியவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். இந்த நிகழ்வு மைதானத்தை தாண்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிகழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது!