ஐபிஎல் 2025

திலக் வர்மாவின் மதிப்பு தெரியும்.. அணியின் நலனுக்காகவே இதை செய்தோம்.. இதை பெரிய விஷயம் ஆக்காதீங்க – மும்பை கோச்

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேனான திலக் வர்மா போட்டியின் இறுதியில் அவுட் ஆகாமல் வெளியேறிய விதம் குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

திலக் வர்மாவை பாதியில் அழைத்த மும்பை

நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்கவீரர் மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற அதற்குப் பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் நமன் திர் சிறப்பாக விளையாடி மும்பை அணியை மீட்டெடுத்தனர். நமன் திர் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற, அவருக்கு பின்னால் வந்த திலக் வர்மா சூரியகுமார் உடன் ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்தே அவர் தடுமாறிய நிலையில் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் அதிக ரன்கள் தேவைப்பட்டதால் அவரை மும்பை நிர்வாகம் உள்ளே அழைத்தது. அவருக்கு பதிலாக களமிறங்கிய சான்ட்னர் பெரிய ஷாட்கள் அடிக்க முடியாததால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதனை பெரிது படுத்த வேண்டாம்

இந்திய அணிக்காக மூன்றாவது வரிசையில் களம் இறங்கி 2 அபார சதங்கள் அடித்திருக்கும் ஒரு முன்னணி பேட்ஸ்மனை, ஒரு போட்டியில் சரியாக விளையாடாததற்காக அவரை பாதியில் உள்ளே அழைப்பது சரியான முடிவாக இல்லை என மும்பை நிர்வாகத்தின் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து மும்பை அணியின் கோச் மகிலா ஜெயவர்த்தனே விளக்கம் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க:நான் கெத்தா சொல்லுவேன்.. கடைசியில் வந்தாலும் எங்க டீமுக்கு அவர் அற்புதமான தேர்வு.. பிரமாதமா ஆடுறாரு – கேப்டன் ரிஷப் பண்ட்

இது குறித்து அவர் கூறும் போது “சூர்யகுமார் யாதவுடன் இணைந்து திலக் வர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் முன்னேற முயற்சித்தார், ஆனால் அவரால் அந்த இடத்தை முழுமையாக அடைய முடியவில்லை. இடையில் சிறிது நேரம் அவர் செலவிட்டதால் நன்றாக மீண்டும் வருவார் என சில ஓவர்கள் நாங்கள் நம்பினோம். ஆனால் அவர் அந்த சமயங்களில் மிகவும் சிரமப்பட்டார். எனவே அப்போது புதிய ஒருவர் யாராவது தேவை. ஒரு முன்னணி வீரரை வெளியேற்றுவது நல்லதல்ல என்று தெரிந்தாலும், அணியின் சூழ்நிலைக்காகவே அந்த முடிவை மேற்கொண்டோம். எனவே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts