நான் கெத்தா சொல்லுவேன்.. கடைசியில் வந்தாலும் எங்க டீமுக்கு அவர் அற்புதமான தேர்வு.. பிரமாதமா ஆடுறாரு – கேப்டன் ரிஷப் பண்ட்

0
21

நேற்று நடைபெற்ற முடிந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற விதம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணி வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 60 ரன்கள் குவிக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் வெற்றியை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு, சூரியகுமார் மற்றும் நமன் திர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து கொண்டிருந்தது. இருப்பினும் நமன் திர் 46 ரன்கள் குவித்து வெளியேற சூரியகுமார் யாதவ் இறுதியில் இக்கட்டான நிலையில் 67 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் ஹர்திக் பாண்டியா கடைசி வரை போராடினாலும் மும்பை அணி இறுதியில் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டி

இந்த வெற்றி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது ” ஒன்று மட்டும் நிச்சயமாக கூறுவேன், இந்த போட்டியில் ஆடுகளம் நன்றாக இருந்தது. எனவே நம்மால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பதை தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன்னர் எங்களுக்கு வேறு வகையான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது என்ன மாதிரியான ஆடுகளம் வழங்கப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு விளையாட முடிவு செய்தோம். மிட்ச் மார்ஸ் போன்ற ஒரு வீரர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் போது மிடில் வரிசை வீரர்களுக்கு சாதகமாக அது அமைகிறது.

இதையும் படிங்க:திலக் வர்மா இதனால்தான் பாதியில் போனார்.. எங்களுக்கு வேற வழி தெரியல – ஹர்திக் பாண்டியா பேட்டி

எனவே நாங்கள் எப்போதும் போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறோம். எங்களுக்கு கிடைத்த தொடக்கம் எங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறது மனதளவில் இன்றைய தினம் எங்களுக்கு கடினமாக இருந்தது. மும்பை அணியும் சிறப்பாக செயல்பட்டது அவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் நாங்கள் இன்றைய போட்டியில் தைரியமாக வென்று காட்டினோம். சர்துல் தாகூர் ஒரு அற்புதமான வீரர் என்று சொல்ல வேண்டும். அவர் எங்களுக்கு கிடைத்தது ஒரு அற்புதமான தேர்வு. அவரை நாம் ஆதரிக்க வேண்டும். திக்வேஷ் எங்கள் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர். ஒரு இளம் வீரர் அப்படி செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -