மேட்ச் ரோமாரியாவுக்கும் டெல்லிக்கும்தான்.. நான் பவுலிங் பண்ணாததுக்கு காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா

0
40
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அடி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏழு ஓவர்களுக்கு 80 ரன்கள் என்று நல்ல துவக்கத்தை ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் கொடுத்தார்கள். கடைசி கட்டத்தில் 10 பந்துகளில் ரொமாரியோ ஷெப்பர்ட் 39 ரன்கள் அடித்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலக்கை நோக்கி போராடி 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் ஸ்டப்ஸ் கடைசியில் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பும்ராவின் பந்துவீச்சு டெல்லி கேப்பிட்டல் அணியின் ரன் வேகத்திற்கு மிகவும் பிரச்சினையாக அமைந்தது. எப்பொழுதெல்லாம் டெல்லி ர்ன் வேகம் அதிகரித்ததோ அப்பொழுதெல்லாம் ஹர்திக் பாண்டியா பும்ராவை வரவைத்து ரன் வேகத்தை குறைத்ததோடு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

எனவே டெல்லி அணியால் இலக்கை சென்று சேர முடியவில்லை. முடிவில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகளைப் பெற்று இருக்கிறது. மேலும் இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி இருந்த நெகட்டிவான விஷயங்களை கொஞ்சம் மாற்றும் என நம்பலாம்.

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா “இது மிகவும் கடினமான ஒரு வேலையாக இருந்தது. நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம் என்று உறுதிப்படுத்த வேண்டி இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் எங்களுடைய திட்டத்தை மாற்றிக் கொண்டோம். நாங்கள் சரியான 12 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமில் அன்பும் ஆதரவும் நிறைய இருந்தது. நாங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டியது முக்கியம் என்று கருதப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜஸ்ட் மிஸ்.. இது மட்டும் நடந்திருந்தா மும்பையை முடிச்சிருப்போம்.. தப்பு நடந்தது இங்கதான் – ரிஷப் பண்ட் பேட்டி

இன்று எங்களுக்கு ஒரு நல்ல துவக்கம் பேட்டிங்கில் அமைந்தது. ஆறு ஓவர்களுக்கு 70 ரன்கள் என்பது மிகவும் சிறப்பானது. சந்தர்ப்பம் கிடைத்த போது அனைவரும் செயல்பட்ட விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த போட்டி ரொமாரியாவுக்கும் டெல்லிக்கும் நடந்ததாக அமைந்துவிட்டது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் முகத்தில் எப்பொழுதும் ஒரு சிரிப்பு இருக்கும். நான் நன்றாகத்தான் இருக்கிறேன் பந்து வீசாததற்கு காரணம், இன்று பந்து வீசியவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் செய்து விட்டார்கள். எனவே நான் பந்து வீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நிச்சயம் சரியான நேரத்தில் வீசுவேன்” எனக் கூறியிருக்கிறார்.