ஜஸ்ட் மிஸ்.. இது மட்டும் நடந்திருந்தா மும்பையை முடிச்சிருப்போம்.. தப்பு நடந்தது இங்கதான் – ரிஷப் பண்ட் பேட்டி

0
326
Rishabh

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றியாக இது அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 49, இஷான் கிஷான் 42, டிம் டேவிட் 41, ரொமாரியோ ஷெப்பர்ட் 39, ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் எடுத்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு பிருதிவி ஷா 66, ஸ்டப்ஸ் 71* ரன்கள் எடுத்தார்கள். மும்பை தரப்பில் ஜெரால்டு கோட் சி 4 மற்றும் பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் இருபதாவது ஓவரை வீசிய அன்ட்ரிச் நோர்க்கியா மொத்தம் 32 ரன்கள் விட்டுத் தந்தார். மேலும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு பேட்டிங்கில் பவர் பிளேவில் பெரிய அளவில் ரன்கள் வரவில்லை. இந்த இரண்டு காரணங்களால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வி அடைந்திருக்கிறது. மற்றபடி அந்த அணி இந்த போட்டியில் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தியது.

தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் “கண்டிப்பாக நாங்கள் இந்த போட்டியில் இருந்தோம். ஆனால் எங்களுக்கு பவர் பிளேவில் போதுமான ரன்கள் வரவில்லை. நீங்கள் இவ்வளவு பெரிய ரன்களை துரத்தும் பொழுது ஆரம்பத்தில் ரன்கள் தேவை. நாங்கள் அதற்கடுத்து சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் தொடர்ச்சியாக ஓவருக்கு 15, 16 ரன்கள் எடுப்பது சுலபமான விஷயம் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : 14 முறையாக அசத்தல்.. ஸ்டப்ஸ் போராட்டம் வீண்.. டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி

நாங்கள் சில மோசமான ஓவர்களை வீசியிருந்தோம். நாங்கள் விக்கெட்டை சரியாக பயன்படுத்திய நேராக வீசி இருக்க வேண்டும். மேலும் மெதுவாக பந்து வீசுவதும் வேரியேஷன் கொடுப்பதும் மிகவும் முக்கியமாகும். பந்துவீச்சாளர்கள் நிலைமையை புரிந்து கொள்வது அவசியம். மேலும் நாங்கள் பேட்டிங்கிலும் சில இடங்களில் முன்னேற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.