புரியாமல் நின்ற ரோகித்.. கட்டாயப்படுத்தி லாங் ஃபீல்டிங் அனுப்பிய ஹர்திக்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கோபம்

0
2833
Rohit

ஐபிஎல் தொடரில் கடந்த பத்து வருடத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் வாங்கி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி, அந்த கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொடுத்தது.

இதன் காரணமாக அந்த அணிக்குள்ளும், மேலும் அணி ரசிகர்களிடமும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவு சலசலப்புகளை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் இதை கடுமையாக வெளிப்படையாகவே எதிர்த்தார்கள். தற்பொழுதும் கூட மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. ஹர்திக் பாண்டியா தன் பழைய அணிக்கு எதிராக களமிறங்குவதும், ரோகித் சர்மா கேப்டன்சியை இழந்து களம் இறங்குவதும், ரசிகர்களுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இந்த போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தது.

இன்று களத்தில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நல்ல முறையிலேயே காணப்பட்டார்கள். ஹர்திக் பாண்டியா ஒரு ரிவ்யூ எடுக்க ரோகித் சர்மாவிடம் கேட்க, பந்து பேட்டில் பட்ட மாதிரி தெரியவில்லை எனவே எடுக்க வேண்டாம் என்று கூறினார். இன்னொரு இடத்தில் ரோகித் சர்மாவே பீல்டிங்கை அட்ஜஸ்ட்மென்ட் செய்தார். மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு பீல்ட் பொசிஷன் மாற்றுவது தொடர்பாக யோசனையும் கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் எல்லாம் மாறி சகஜ நிலைமை உருவாகி இருப்பதாக தெரிந்தது.

இப்படியான நிலைமையில் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதில் ஹர்திக் பாண்டியா லாங் ஆன் திசையில் வெளியில் பீல்டிங் நிற்கும்படி கூற, ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா யாரை நிற்க சொல்கிறார் என்று தெரியாமல் உள் வட்டத்தில் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா வெளியே போய் நிற்க சொல்ல, என்னைத்தான் வெளியே நிற்க சொல்கிறாயா என்று கேட்டு பிறகு வெளியே போய் நின்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கா ஆட்டநாயகன் விருது?.. எங்களை விட மும்பைக்குதான் ஈசியா இருந்தது – சாய் சுதர்சன் பேட்டி

ரோகித் சர்மா பல காலமாக இந்திய அணி வரை உள்வட்டத்தில் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரை லாங் பீல்டிங்டில் ஹர்திக் பாண்டியா வலியுறுத்தி நிற்க வைத்தது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களை பெரிதும் கோபப்படுத்தி இருக்கிறது. மேலும் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெல்ல வேண்டிய ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் தோற்றதால், ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் எக்கச்சக்கமாக கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.