கோலி ரோஹித்தை விடுங்க.. இந்த 2 பேராலதான் இந்தியாவுக்கு டி20 உலககோப்பையை வாங்கி தர முடியும் – மைக்கேல் வாகன் கருத்து

0
10
Vaughan

இந்திய அணி கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியதே கடைசி உலக கோப்பையை கைப்பற்றியதாக இருக்கிறது. இதற்கு அடுத்து 13 ஆண்டுகள் ஆகி இன்னும் ஒரு உலகக் கோப்பை தொடரை கூட இந்திய அணி கைப்பற்றவில்லை. இது குறித்து மைக்கேல் வாகன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தற்பொழுது நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாத இறுதியில் முடிவடைந்ததும், ஜூன் மாத ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்கி அடுத்த ஒன்றரை மாதங்கள் நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு எல்லா அணிகளும் தங்களது அணிகளை கொடுப்பதற்கான கடைசி செய்தியாக மே ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஏப்ரல் மாதத்தில் கடைசியில் இந்திய தேர்வுக்குழு டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை அறிவிக்கும் என்பது உறுதியான ஒன்றாக இருக்கிறது. மேலும் மே 26 ஆம் தேதி வரையில் தேவைப்படும் மாற்றங்களை அறிவித்த அணியில் செய்து கொள்ளவும் முடியும்.

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய டி20 அணிக்கு திரும்பி இருக்கின்ற காரணத்தினால், எந்த இரண்டு வீரர்களை வெளியேற்றுவது? மேலும் புதிதாக யாருக்கு வாய்ப்பு தருவது? விக்கெட் கீப்பர்கள் யார்? என்பது போன்ற கேள்விகள் டி20 உலகக்கோப்பை இந்திய அணித் தேர்வில் மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு ஹர்திக் பாண்டியா கட்டாயம் தேவை. அவர்மிக நன்றாக விளையாட வேண்டும். மேலும் ஐபிஎல் தொடரில் அடுத்த சில வாரங்களில் அவர் நன்றாக விளையாடி நம்பிக்கையின் உச்சத்திற்கு வர வேண்டும். ஏனென்றால் அவர் அப்படி வருவது மூலமாகத்தான் இந்தியா உலகக் கோப்பையில் வெல்ல முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : KKR vs LSG: பச்சை மெரூன் நிற ஜெர்சியில் களம் இறங்கும் லக்னோ அணி.. விசித்திர காரணம்

மேலும் ஹர்திக் பாண்டியா உடன் ரிஷப் பண்ட் சேர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடாவிட்டால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கவில்லை. ரிஷப் பண்ட் பழைய முறையில் மிகச் சிறப்பாக விளையாடுவது அவசியம். தற்போது அவரும் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் தேவை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.