ரஞ்சி பைனலில் சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் சதம்.. 3 நாக்-அவுட் மேட்ச்சிலும் கலக்கல் பேட்டிங்

0
401
Musheer

மும்பை எதிர்பா அணிகளுக்கு இடையே, மும்பை வான்கடே மைதானத்தில் ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த போட்டியில், தற்பொழுது மும்பை அணியின் கைகள் பலமாக ஓங்கி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய விதர்பா அணி மும்பை அணியை 224 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதற்கடுத்து பேட்டிங் செய்த விதர்பா அணியை மும்பை அணி 105 ரன்ளுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியது.

- Advertisement -

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிருதிவி ஷா 11, பூபேன் லல்வானி 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரகானே மற்றும் சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் இருவரும் நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து, நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கொண்டு விக்கெட் தராமல் சென்று இருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் ரகானே 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து முசிர் கான் உடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். சமீபத்தில் பேட்டிங் ஃபார்மில் இல்லாமல் இருக்கும் அவர் இந்த முறை இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று முதல் ஆடுகளத்திற்கு ஏற்றது போல் மிகப் பொறுமையாக விளையாடிய முசிர் கான் சதம் அடித்து அட்டகாசப்படுத்தினார். 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து நிலைத்து நின்று விளையாடி அவர் இந்த சதத்தை பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

சிவம் துபே மும்பை அணியில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இவருக்கு ரஞ்சி கால்இறுதிப் போட்டியில் பரோடா அணிக்கு எதிராக மும்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் மும்பை பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சொதப்ப முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தார்.

அடுத்து அரைஇறுதியில் தமிழக அணிக்கு எதிராக மும்பை டாப் பார்டர் முதல் மிடில் வரிசையில் எல்லோரும் சொதப்ப இவர் மட்டுமே அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “கவாஸ்கர் சாரை என்னை மன்னிக்க சொல்லுங்கள்.. இனி அந்த தப்பை செய்யவே மாட்டேன்” – சர்ப்ராஸ் கான் கோரிக்கை

இந்த நிலையில் தற்பொழுது ரஞ்சி இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருக்கிறார். இந்த வருட ரஞ்சி மூன்று நாக் அவுட் போட்டிகளிலும் ஒரு இரட்டை சதம், ஒரு சதம், ஒரு அரைசதம் என மொத்தமாக 400 ரன்களை கடந்து இருக்கிறார். அண்ணன் ஒரு பக்கம் இந்திய அணியில் கலக்க, தம்பி அண்ணன்கிட்ட இடத்தில் இருந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார்.