என் பவுலிங்ல அடிக்க முடியாதுனு சொன்னேன்.. ஆனா சிவம் துபே வித்தியாசமா பண்ணிட்டார் – மோகித் சர்மா பேச்சு

0
520
Shivam

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும் இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தி பெரிய ரன் ரேட் உடன் தற்பொழுது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து, குஜராத் டைட்டன்ஸ்ஸ் பந்துவீச்சாளர்களை அடுத்து என்ன செய்வது என்று புரியாத அளவுக்கு செய்து விட்டு வெளியேறினார். இங்கிருந்து கேப்டன் ருதுராஜ் கொஞ்சம் பொறுமையாக 36 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நகரத்தினார்.

- Advertisement -

ஆனால் நான்காவது வீரராக களத்திற்கு வந்த சிவம் துபே எடுத்ததும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆரம்பித்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சித்தர்கள் உடன் 51 ரன்கள் குவித்து, ரச்சின் ரவீந்திரா விட்ட இடத்தை நிரப்பி, சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவிப்பதற்கு காரணமாக இருந்தார். இதற்குப் பின் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்றைய போட்டியில் சிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சிவம் துபே பேட்டிங் பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மோகித் சர்மா கூறும் பொழுது ” கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சிவம் துபே தன்னுடைய பேட்டிங்கை எப்படி மேம்படுத்திக் கொண்டார் என்பது பாராட்ட வேண்டிய விஷயம். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் அடுத்து பெரிய தொடர்கள் வர இருக்கின்றன. அதே சமயத்தில் சிஎஸ்கே அணிக்கும் இது நல்லதாக அமையும்.

நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்காக தனியாக திட்டமிடும் பொழுது அவரைவிட முன்னால் இருப்பீர்கள். ஆனால் சிவம் துபே போன்ற ஒரு பேட்மேன், தனக்கு அடுத்து ஒரு யார்க்கர் வரலாம், அல்லது ஒரு ஸ்லோ பவுன்சர் வரலாம் என்று காத்திருப்பார்கள். நாங்கள் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்த பொழுது பெரிய பக்கத்திற்கு என்னுடைய மெதுவான பந்துகளை அடிக்க முடியாது என்று அவரிடம் கூறினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி பேட்டிங்கில் 8வது வர.. பிளெமிங் எடுத்த அந்த முடிவு தான் காரணம்.. சிஎஸ்கே மைக் ஹஸ்ஸி பேட்டி

ஆனால் சிவம் துபே எந்த பந்தை அடிக்க வேண்டும் எதை விட்டு விட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். அப்படிப்பட்ட மனநிலையை நீண்ட காலத்திற்கு கொண்டு இருக்க வேண்டும். இதுவரை அவர் பேட்டிங் செய்த விதம், அவர் எப்படி போய்க்கொண்டிருக்கிறார் என்பதில், அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.