தோனி பேட்டிங்கில் 8வது வர.. பிளெமிங் எடுத்த அந்த முடிவு தான் காரணம்.. சிஎஸ்கே மைக் ஹஸ்ஸி பேட்டி

0
2392

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. இம்பேக்ட் ப்ளேயராக களம் இறங்கிய சிவம் துபே அதிரடியாக விளையாடி 51 ரன்கள் குவித்தார். பின்னர் இந்த இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 148 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியடைந்தது. இதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தனது இரண்டாவது வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது.

- Advertisement -

இது சென்னை ரசிகர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாகவே இருந்தாலும், சென்னை அணியின் வெற்றியை தாண்டி முதல் நோக்கமாக மைதானத்திற்குள் வருவது மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கை காண்பதற்காகத்தான். ஆனால் அது இந்த சீசனில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நடைபெறவில்லை.

காரணம் சென்னை அணியின் மிக வலுவான பேட்டிங் ஆர்டர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே அவசரமாக விளையாடாமல் நிதானமாக ஆட்டத்தை எடுத்துச் செல்லக் கூடியவர்கள். அதற்கு பின்னர் களமிறங்கும் ரகானேவும் அப்படித்தான். பின்னர் களமிறங்கும் சிவம் தூபே, ஜடேஜா ஆகியோரும் அதிரடியாகவும் அதே நேரத்தில் பொறுமையாக விளையாடக் கூடியவர்கள்.

பேட்டிங்கில் 8வது இடத்தில் தோனி

எனவே இவர்கள் யாரும் அவ்வளவு எளிதாக விக்கட்டை கொடுத்து விட மாட்டார்கள். எனவே இவர்களை தாண்டித்தான் எம்எஸ் தோனி எட்டாவது வரிசையில் களமிறங்குகிறார். இதனால் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருக்கிறது. இது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில் ” பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இம்பாக பிளேயர் விதியின் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுத்து பேட்டிங் ஆர்டரை வலுவடையச் செய்து அடுத்த கட்டத்திற்கு அணியை எடுத்துச் செல்ல நினைக்கிறார்.

- Advertisement -

இதனால் மகேந்திர சிங் தோனி தற்போது பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் களமிறங்குகிறார் என்று நினைக்கிறேன். இது சற்று ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் அவர் தற்போது மிகவும் நன்றாக பேட்டிங் செய்கிறார். அணியின் பேட்டிங் ஆர்டர் தற்போது வலுவான நிலையில் இருக்கிறது. அதுவே கேப்டனும் பயிற்சியாளரும் விரும்புகிறார்கள். நாங்கள் விளையாட்டில் வெற்றி பெறவே விரும்புகிறோம். ஒரு அணி வெற்றிப் பாதையில் செல்லும் போது நீங்கள் விமர்சிக்கப்பட மாட்டீர்கள். பிளம்பிங் நாங்கள் வேகமாக விளையாட விரும்புகிறார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: மீதி 53 போட்டி அட்டவணை வெளியானது.. சிஎஸ்கே போட்டிகளின் முழு பட்டியல்

இதனால் போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கை பார்க்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி களமிறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.