இந்திய கிரிக்கெட்

இந்திய அணி என்னை சேர்க்காதது நல்லதுதான்.. இனி வேற ஒரு சிராஜை பார்ப்பீங்க – முகமது சிராஜ் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் அவரது இடம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்திய அணியில் இடம் இல்லை

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய முகமது சிராஜ், அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவருக்கான இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக இந்திய அணிக்குள் நுழைந்த வரும் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் தற்போது குஜராத் அணிக்காக விளையாட போகும் முகமது சிராஜ், இந்திய அணியில் தனது இடம் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அணியில் இடம் பெறுவது குறித்து நான் அதிகமாக சிந்திக்க போவதில்லை எனவும் தற்போது இருக்கும் எனது ஒரே கவனம் குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமே என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நிறைய ஓய்வு கிடைத்துள்ளது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அணியில் தேர்வு என்பது என் கையில் இல்லை என் கையில் கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது. அதை வைத்து என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன். நான் எனது செயல் திறனில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஒரு வீரராக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கோப்பை எப்போதும் உங்கள் மனதில் இருக்கும். ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. மாறாக தற்போது குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்படுவது மட்டுமே எனது எண்ணமாக உள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2024 குழப்பத்தை சரிசெய்ய.. ஹர்திக் அவர்கிட்ட நிச்சியம் பேசிருப்பாரு.. பிரச்சனை முடிஞ்சது – எம்ஐ முன்னாள் கோச்

நான் சில வருடங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன் எனக்கு பெரும்பாலும் ஓய்வு கிடைப்பதில்லை. ஆனால் இந்த முறை எனக்கு ஓய்வு கிடைத்தால் எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி இருக்கிறேன். பழைய மற்றும் புதிய பந்துகளில் பந்து வீசுவதற்கு நான் கடினமாக உழைத்து உள்ளேன். எனது மெதுவான பந்துவீச்சுகள் மற்றும் யார்க்கர் பந்துகளை வீசுவதில் மேம்படுத்தியுள்ளேன். எனவே இந்த முறை ஐபிஎல் தொடரில் அது எனக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by