ஐபிஎல் 2024 குழப்பத்தை சரிசெய்ய.. ஹர்திக் அவர்கிட்ட நிச்சியம் பேசிருப்பாரு.. பிரச்சனை முடிஞ்சது – எம்ஐ முன்னாள் கோச்

0
162

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டிற்கும், இந்த ஆண்டிற்கும் இடையேயான வித்தியாசம் குறித்து மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விஷயங்களை சரி செய்து இருப்பார்

கடந்த ஆண்டு மும்பை அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா சொந்த மாநில ரசிகர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். அதன் எதிரொலி அவர் இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவருக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு அவரால் தகுதி பெற வைக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையிலும் உடைந்து போயிருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 உலக கோப்பை பெரிய உத்வேகத்தை அளித்தது.

அதுவரை விமர்சனம் செய்திருந்த இந்திய மக்கள் உலகக் கோப்பைக்கு பிறகு அவரை கொண்டாட தொடங்கினார்கள். அதற்குப் பிறகு மேலும் ஒரு உச்சமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்ற நிலையில், ஹர்திக் பாண்டியா மீதான மரியாதை பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டை போல ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ஆண்டு இருக்காது எனவும், விஷயங்களை சரி செய்து மும்பை அணியை அவர் சிறப்பாக வழி நடத்துவார் என்று முன்னாள் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மக்கள் அவரை அனுமதிப்பார்கள்

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் ஹர்திக் பாண்டியாவுக்காக பேச விரும்பவில்லை. அவரால் தனக்காக பேச முடியும், நான் ஒரு பயிற்சியாளராக கூற வருவது என்னவென்றால் கடந்த ஆண்டு அவருக்கு கடினமாக இருந்தது. சொந்த ஊரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உங்களை ஏளனம் செய்யும் ஒரு சொந்த கூட்டத்திற்கு மத்தியில் வெளியே செல்வது என்பது எளிதான காரியமே கிடையாது. ஆனால் ஹர்திக் அதனைத் தாங்கிக் கொண்டு சிறந்தவராக இருந்தார். ரசிகர்கள் அவர்களது சொந்த கருத்துக்களை கொண்டிருப்பார்கள் அதனை நான் 100% மதிக்கிறேன்.

இதையும் படிங்க:என் பசங்க வேற ரகம்.. தனிப்பட்ட சாதனைக்கு யாரும் விளையாடல.. சீனியர் வீரர்களை விமர்சிக்கும் பாக் டி20 கேப்டன்

ஐபிஎல் முடிந்த பிறகு விஷயங்களை சரி செய்து கொள்ள நேரம் கிடைத்திருக்கலாம். ஹர்திக் ரோகித் சர்மா உடன்பேசி விஷயங்களை சரி செய்து இருப்பார் என்று நினைக்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ஒரு கிரிக்கெட் வீரர் இது போன்ற நிகழ்வை பார்க்கும் போது அவருக்கு நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்காது. அவர்கள் சாம்பியன் டிராபி கோப்பையையும் வென்றுள்ளனர். இப்போது அனைத்தும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே தற்போதைய பயிற்சியாளர் மகேலாவுக்கு பெரிய கவலை இருக்காது. மேலும் மக்கள் அவர்களை சொந்த கிரிக்கெட் விளையாடவும் அனுமதிப்பார்கள் என்று தோன்றுகிறது” என்று அவர் பேசியிருக்கிறார்

- Advertisement -