ரசல் அதிரடிக்கு காரணம்.. உங்களுக்கு பெருசா தெரியாத இந்த இந்திய வீரர்தான் – ஹைதராபாத் கோச் பேட்டி

0
234
Vettoro

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் என இரண்டு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மென்டராக, இந்திய அணியின் முன்னாள் துவக்க இடதுகை ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். 2022 மற்றும் 2023 என இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து புதிய அணியாக இருந்தாலும் லக்னோ அணி ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்த நிலையில் கௌதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் மென்டர் பதவியில் இருந்து மட்டும் விலகியதோடு இல்லாமல், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றும், ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது என்று, தன்னுடைய பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக தற்பொழுது நடப்பு ஐபிஎல் சீசனில் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குள் வந்ததுமே தேவையான இடங்களுக்கு ஏலத்தில் மிகச் சரியான வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் நேற்றைய போட்டியில் பிளேயிங் லெவன் மற்றும் பேட்டிங் ஆர்டரில் கம்பீர் சுனில் நரைனை துவக்க வீரராக அனுப்பினார். மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை குறைத்து, மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரமன்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் சேர்த்தார்.

இந்திய அணிக்கு பத்து ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் விழுந்திருந்தால் உடனே ரிங்கு சிங்குதான் அந்த இடத்தில் விளையாடு வருவார். ஆனால் நேற்று அந்த இடத்தில் ரிங்கு சிங்கை அனுப்பாமல், ரமன்தீப் சிங்கை அனுப்பினார்கள். அணி நெருக்கடியில் இருந்த பொழுது அவர் தைரியமாக 17 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் எடுத்து, போட்டியின் வேகத்தைகொல்கத்தா அணியின் பக்கமாக திருப்பினார். அங்கிருந்து ரசல் வந்து அதிரடியாக விளையாடுவதற்கு வசதியாகவும், அணி 200 ரன்களை கட்டுவதற்கு வசதியாகவும் அமைந்தது.

இதுகுறித்து ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி கூறும்பொழுது “ரமன்தீப் சிங் விளையாடியது சிறந்த இன்னிங்ஸ். நாங்கள் அவரை குறைத்து மதிப்பீடு கிடையாது. அவர் விளையாடிய ஷாட்கள் அருமையாக இருந்தது. அது எங்கள் மீது அழுத்தத்தை உருவாக்கியது. நல்ல டி20 ஆட்டங்கள் மற்றும் நல்ல டி20 வீரர்கள், சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் விளையாடி எதிரணி மீது அழுத்தம் கொடுக்க முடிகிறது. நேற்று அவர் அதைத்தான் செய்தார். மேலும் மறுபடியும் பில் சால்ட்டை ரன் அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் நேத்து ஆக்ரோஷமா நடந்துகிட்டேன்.. அதுக்கு காரணம் இதுதான் – ஹர்ஷித் ராணா பேச்சு

மிக முக்கியமாக ரமன்தீப் சிங் இன்னிங்ஸ் ரசல் வந்து விளையாடுவதற்கு அடிப்படை களத்தை உருவாக்கிக் கொடுத்தது. இந்த மைதானத்தில் இப்படி விளையாடுவது கொஞ்சம் ட்ரிக் ஆனது. வெளிப்படையாக அவர் பந்தை காற்றில் அடிக்கிறார் இதனால் எங்களுக்கு சில வாய்ப்புகள் இருக்கும். ஆனால் அவர் சக்தி மிகப்பெரிய அளவில் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.