“ஆவரேஜ் பிளேயர்தான் ஆவரேஜ் பார்ப்பார்.. நான் இந்த இந்திய வீரர் மாதிரி விளையாடறேன்” – முகமது ரிஸ்வான் பேச்சு

0
286
Rizwan

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது பாபர் அசாமுக்கு நிகராக பேசக்கூடிய வீரராக முகமது ரிஸ்வான் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனிப்பதோடு, அணியை களத்தில் ஒருங்கிணைப்பதிலும் மிகவும் சிறந்தவர்.

மேலும் பாகிஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, தன் விக்கெட்டை காப்பாற்றி அதன் மூலம் எதிரணிக்கு மிகப்பெரிய சோதனைகளைக் கொடுக்கக் கூடியவர்.

- Advertisement -

உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வீழ்த்தியதில்லை என்ற சோகத்தில் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதியதில் முகமது ரிஸ்வானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இந்திய அணிக்கு எதிராக 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2022 ஆசியக் கோப்பையில் முகமது ரிஸ்வான் இந்திய அணியின்தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தார். சூழலுக்கு ஏற்ப பதட்டப்படாமல் களத்தில் நின்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்.

பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்ட பிறகு இவருக்குத்தான் கேப்டன் பொறுப்பு வரும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் இவரைத் தாண்டி ஷாகின் அப்ரிடியிடம் வெள்ளைப் பந்து கேப்டன் பொறுப்பு சென்றது ஆச்சரியமானதாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங்கை எப்படி எல்லா வடிவத்திற்கும் கொண்டு வருகிறார் என்று கூறும்பொழுது “நான் முதலில் அணிக்காக விளையாடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த ரோல் ஏற்று இருக்கிறீர்களோ அதற்கு விளையாட வேண்டும். எந்த வீரத் தன்னை காப்பாற்றிக்கொள்ள மட்டும் நினைக்கிறாரோ அவர் அதிக தூரம் விளையாட்டில் நீடிக்க மாட்டார்.

சராசரியான வீரர்கள் தங்களுடைய ரன் சராசரியை மட்டுமே பார்ப்பார்கள். இந்திய வீரர் விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவருடைய ரன் சராசரி மிகவும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அவர் எப்பொழுதும் தன்னுடைய ரன் சராசரியை பார்க்க மாட்டார். அணி எந்த நிலைமையில் இருக்கிறது என்று வெற்றி நோக்கிதான் விளையாடுவார். அதனால்தான் அவர் பெரிய வீரர். யார் சராசரியை பார்க்கிறார்களோ அவர்கள் சராசரியான வீரர்கள். என் கவனம் சூழ்நிலைக்கு ஏற்ப அணியை வெற்றி பெற வைப்பதில் இருக்கிறது.

இதையும் படிங்க : “நான்தான் ஆல்ரவுண்டர்.. 140 கி.மீ வேகம்.. புதுமையான ஷாட்.. வேற மாதிரி வரப்போறன்” – தீபக் சகர் பேட்டி

ரிஸ்வான் ஸ்கோர் போர்டை பார்த்து அதற்கு ஏற்றவாறு விளையாடக்கூடியவர் என்று அணி நிர்வாகம் சொல்லும். நான் சொந்த விளையாட்டில் இதைத்தான் செய்கிறேன். டி20 கிரிக்கெட்டில் புதிய பந்திலும், 50 ஓவர் கிரிக்கெட்டில் 25 ஓவர்கள் தாண்டி தேய்ந்த பந்திலும் வந்து விளையாடுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. நான் அப்படியான கடினமான விஷயத்தைதான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.