“நான்தான் ஆல்ரவுண்டர்.. 140 கி.மீ வேகம்.. புதுமையான ஷாட்.. வேற மாதிரி வரப்போறன்” – தீபக் சகர் பேட்டி

0
186
Deepak

பொதுவாக உலக கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு பெரிய பற்றாக்குறை எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா தற்பொழுது 3 மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கிறது. இங்கிலாந்து அணியும் இரண்டு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு ஹர்திக் பாண்டியா தவிர நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. சர்துல் தாக்கூர் பேட்டிங்கில் வெள்ளைப்பந்தில் நம்பிக்கை அளிக்கவில்லை. சிவம் துபே பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் தீபக் சகர் வெள்ளைப் பந்தில் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் முன்பு விளையாடி காட்டி இருக்கிறார்.

தீபக்சகருக்கு பெரிய பிரச்சினையாக காயம் இருந்து வந்திருக்கிறது. மேலும் இந்திய அணியின் நிலையான வீரராக அவரால் தொடர முடியவில்லை. தற்பொழுது காயத்தில் இருந்து அவர் வெளியே வந்திருக்கிறார். தற்போது அவரது திட்டம் என்ன? என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் தோனி பாய்க்கு முன்பு நான் அனுப்பப்பட்டேன். நான் அப்படி சென்றது அதுதான் முதலும் கடைசியும். அந்த போட்டியில் நான் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தேன்.

- Advertisement -

மேலும் கோவிட் முடிந்து யுஏஇல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் 24 ரன்களுக்கு பவர் பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ஆனால் அதற்கு மேல் நாங்கள் விளையாடி 158 ரன்கள் எடுத்தோம்.

14 ஓவர்கள் முடிந்துதான் ருதுராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அடிக்க ஆரம்பித்தார்கள். மற்ற அணிகளில் இது போன்று நடக்காது. எங்கள் அணிகளில் பேட்டிங் ஆழம் மிகவும் அதிகம். இதன் காரணமாக எங்களால் எப்படியும் விளையாட முடியும்.

நான் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விளையாடும் பொழுது கிட்டத்தட்ட 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டிருந்தேன். நீங்கள் தொடர்ந்து விளையாடும்போது உங்களை வலிமைப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்து விடும். இதனால் வேகமும் குறைந்து விடும். தற்பொழுது நான் வேகத்தில் வேலை செய்து வருகிறேன்.

இதையும் படிங்க : WTC.. நியூசிக்கு எதிரான ஆஸி டெஸ்ட் அணி அறிவிப்பு.. இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்புக்கு முக்கிய தொடர்

மேலும் நான் கீழ் வரிசையில் பேட்டிங் செய்வதால் மூன்று அல்லது நான்கு பந்துகள் தான் சந்திக்க முடியும். எனவே இந்த மாதிரி நேரத்தில் விளையாடுவதற்கு புதுமையான ஷாட்கள் வேண்டும். நான் அதிலும் பயிற்சி செய்து வருகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.