கோலி சூரியகுமார் கிடையாது.. ஹர்திக்தான் உலககோப்பையை நமக்குத் தருவார்.. இதான் காரணம் – கைஃப் பேச்சு

0
107
Hardik

நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம் என பலராலும் கருதப்பட்டது. இந்த நிலையில் அவரை அணியில் சேர்த்ததோடு துணை கேப்டன் பொறுப்பையும் வழங்கி இருக்கிறார்கள். தற்போது ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம் குறித்து முகமது கைஃப் பேசி இருக்கிறார்.

தற்பொழுது டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட அணியில் உறுதியான ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் பந்து வீசக்கூடிய சிவம் துபேவும் இடம்பெற்று இருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்ப்பது கடினம் என்று பலரும் நினைத்து இருந்தார்கள். அகர்கர் எப்படியான கடின முடிவையும் எடுக்க தயங்க மாட்டார் என்று கூறப்பட்டது.

இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணி இடம் கொடுத்தது குறித்து பலவாறான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. சிலர் அவரை சேர்த்திருக்கக் கூடாது என்றும் பேசி வருகிறார்கள். தற்போது இது குறித்து முகமது கைஃப் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவை தாண்டி ஐசிசி தொடர்களில் அதிக தாக்கத்தை ஹர்திக் பாண்டியா ஏற்படுத்தியிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக இருந்தாலும், மிக முக்கியமான 40 ரன்கள் ஹர்திக் பாண்டியா எடுத்தார். அதே போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தார். மேலும் டி20 வடிவத்தில் ஆசிய கோப்பையில் ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்த பொழுது, முகமது நவாஸ் பேசிய கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜை விட கில் என்ன செஞ்சுட்டாரு.. அப்பட்டமான ஃபேவரிடிசம்.. செலெக்டர்ஸ் மோசம் – ஸ்ரீகாந்த் மீண்டும் விமர்சனம்

நிச்சயமாக நல்ல அணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இது ஐபிஎல் தொடர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால், நீங்கள் ஓரிரு போட்டிகளில் தோற்றாலும் திரும்பி வந்து கோப்பையை வெல்ல முடியும். ஆனால் டி20 உலகக்கோப்பையில் அப்படி செய்ய முடியாது.நீங்கள் முதலில் பலவீனமான அணிகளுக்கு எதிராக விளையாடி, பிறகு வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடும் சூழ்நிலைக்கு வருவீர்கள். அங்கு அரையிறுதியில் இங்கிலாந்து பாகிஸ்தான் போன்ற அணிகளை சந்திக்க வேண்டி வரும். முக்கியமான கடைசி இரண்டு போட்டிகளை வென்றால் மட்டுமே உலகக் கோப்பை கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்