இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அவர்கள் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலையில் இன்று கடைசி போட்டியை லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் கேப்டன்சி குறித்து பேசி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, குஜராத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்து மும்பை இந்தியன் அணியில் கேப்டனாக நியமித்தது தற்பொழுது வரை சர்ச்சையாக நீடித்து வருகிறது.
இது அணிக்குள் நிறைய பின்னடைவுகளை பிளவுகளை உருவாக்கி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒரு குழுவாக சேர்ந்து விளையாடாதது களத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எட்டக்கூடிய இலக்கை கூட வீரர்கள் கோட்டை விட்டார்கள்.
மேலும் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எந்தவித பெரிய தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. இதுவெல்லாம் சேர்ந்து அந்த அணியை புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளி விட்டது. இந்த நிலையில் தன்னுடைய கேப்டன்சி குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “எனது கேப்டன்சி எளிமையானது என்று நான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியா அணியில் உள்ள 10 பேருடன் சேர்ந்து விளையாடுகிறார் அவ்வளவுதான். இந்த மந்திரம் மிகவும் எளிமையானது. நீங்கள் நம்பிக்கையையும், அன்பையும் கொடுக்க வேண்டும். அவர்கள் வெளியேறி 100% கொடுப்பார்கள். இதைத்தான் நான் கேட்கிறேன்.
இதையும் படிங்க : கேஎல் ராகுலை நாங்க இயல்பா விளையாட விடல.. உள்ளுக்குள் நடந்த விஷயம் இதுதான் – லக்னோ கோச் குளூஸ்னர் பேச்சு
மேலும் நான் கேப்டனாக வெற்றி தோல்வி பற்றி முடிவுகளை பார்க்கக் கூடியவன் கிடையாது. வீரர்கள் என்ன மாதிரியான அணுகு முறையை காட்டுகிறார்கள்? என்றுதான் பார்க்கிறேன். அந்த அணுகுமுறை அணிக்கு உதவி செய்யக் கூடியதாக இருக்கும? என்று பார்க்கிறேன். இதுதான் கேப்டன்சி பாணி” என்று கூறியிருக்கிறார்.