ருதுராஜை விட கில் என்ன செஞ்சுட்டாரு.. அப்பட்டமான ஃபேவரிடிசம்.. செலெக்டர்ஸ் மோசம் – ஸ்ரீகாந்த் மீண்டும் விமர்சனம்

0
218
Gill

நடப்பு ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பத்தில் பெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரிசர்வ் வீரர்கள் இடத்தில் மாற்று துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரை விட மிகச் சிறப்பாக சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரிலும் விளையாடும் ருதுராஜுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பலரும் அதிர்ச்சி அடையும் விதமாக ரிங்கு சிங்கை சேர்க்கவில்லை. அவரை ரிசர்வ் வீரர்கள் இடத்தில் வைத்திருக்கிறார்கள். மேலும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை அணியில் கொண்டு வந்திருக்கிறார்கள். ரோகித் சர்மாவும் விராட் கோலியும் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்றால் ஜெய்ஸ்வால் அணியில் தேவையில்லை என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த அணியில் முதலில் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று பல முன்னாள் வீரர்கள் விவாதம் செய்து வந்தார்கள். இப்படியான நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதோடு, அவரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் தேர்வுக்குழு அறிவித்தது மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தேர்வுக் குழுவின் இந்த சில முடிவுகள் பலராலும் சமூக வலைதளத்தில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் இருவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டு விளக்கம் அளிப்பார்கள் என கூறப்பட்டிருக்கிறது.

மேலும் ரிங்கு சிங் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து, இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையான விமர்சனத்தை நேற்று முன் வைத்திருந்தார். அதை பலரும் வரவேற்க செய்திருந்தார்கள். இந்த நிலையில் ருதுராஜை விலக்கி கில்லுக்கு ரிசர்வ் வீரராக வாய்ப்பு கொடுத்தது பற்றி ஸ்ரீகாந்த் மீண்டும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை இந்தியா ஜெயிக்கும்.. ரோகித் டிராவிட்டுக்கு இது தெரியும் – சங்கக்கரா பேச்சு

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சுப்மன் வில் தற்போது பார்மிலேயே இல்லை. ஆனால் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் அவரை ஏன் ரிசர்வ் வீரராக தேர்ந்தெடுக்க வேண்டும்?. ஏனென்றால் கில் தேர்வாளர்களுக்கு விருப்பமான வீரர். அவர்எவ்வளவு சொதப்பினாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள். அவரும் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருப்பார். என்ன காரணத்திற்கு ருதுராஜ் கில் இடத்தில் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட முடியாமல் போனது? தேர்வில் முழுக்க ஃபேவரட்டிசம் இருக்கிறது. செலெக்டர்கள் மோசம் செய்து விட்டார்கள்” எனக் கூறியிருக்கிறார்.