கேஎல் ராகுலை நாங்க இயல்பா விளையாட விடல.. உள்ளுக்குள் நடந்த விஷயம் இதுதான் – லக்னோ கோச் குளூஸ்னர் பேச்சு

0
554
Klusener

நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 12 புள்ளிகள் எடுத்து கேஎல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்திருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து லக்னோ அணியின் துணை பயிற்சியாளர்ள் லான்ஸ் குளூஸ்னர் பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ipl தொடரில் லக்னோ அணி 11 போட்டிகளில் 12 புள்ளிகள் எடுத்து வலிமையான இடத்தில் இருந்தது. மேற்கொண்டு மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டிய சூழ்நிலை அமைந்தது. இப்படியான நேரத்தில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்விகள் அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

மேலும் கே.எல்.ராகுல் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியில் இருந்து கிளம்பியது. மேலும் அணி உரிமையாளர் நடு மைதானத்தில் கேஎல்.ராகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகவும் பரபரப்பாக மாறியது. தற்போது அந்த அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நடப்பு ஐபிஎல் தொடரில் கேஎல்.ராகுல் சில சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். ஆனால் நாங்கள் அவரைச் சுற்றி விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம்.எனவே அவர் தொடர்ந்து ஆட்டத்தை கட்டமைக்க வேண்டியதாக இருந்தது. நாங்கள் அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்கவில்லை.

அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என உட்கார்ந்து பேசுவது எளிதானது. ஆனால் அவர் எப்படியான சூழ்நிலையில் பேட்டிங் செய்தார் என்று பார்க்கும் பொழுதும், அவர் எடுத்துள்ள ரன்களை ஒப்பிடும் பொழுதும், அவர் உண்மையில் மோசமாக செயல்படவில்லை என்பது புரியும். அவர் அணியின் மரியாதையைப் பெற்றிருக்கிறார். அவரது கேப்டன்சியை பொறுத்த வரையில் அது சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் திரும்பிப் பார்த்தால் அவர் எடுத்த ரன்கள் குறித்து அவர் கொஞ்சம் விரக்தி அடையலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு எதிரா ஆர்சிபி வெற்றி பெறும்.. அதுக்கான காரணங்களை நீங்களே பாருங்க – பிரையன் லாரா கணிப்பு

டி20 போட்டிகளை வெல்ல பந்துவீச்சு குழு முக்கியமானது என்று நான் எப்பொழுதும் நம்புகிறேன். ஒரு தனியாக எங்களிடம் நிலைத்தன்மை இல்லாததுதான் இந்த முறை தோற்றதற்கான காரணமாக அமைந்திருக்கிறது. நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை மேலும் போதுமான அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்த காரணத்தினால்தான் நாங்கள் இப்பொழுது இந்த நிலையில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.