நடப்பு ஐபிஎல் தொடரில் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் போட்டி கால் இறுதிப் போட்டி போல அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது குறித்து பிரையன் லாரா காரணங்களை அடுக்கி பேசியிருக்கிறார்.
இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதே சமயத்தில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசம் அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி வர முடியும்.
மேலும் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை விட நல்ல வேகத்தைக் கொண்டு இருக்கிறது. அந்த அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. அவர்கள் ஒரு அணியாக இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து பிரையன் லாரா கூறும்பொழுது “ஆர்சிபி அணி வெற்றி பெறுவது வெறும் பார்ம் சார்ந்த விஷயம் கிடையாது. அவர்கள் 5 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேறு எந்த அணிகளும் இதை செய்ய கிடையாது. அந்த அணியில் விராட் கோலி இருக்கிறார். அவர் பயங்கரமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் மற்ற வீரர்களும் தங்கள் ரோல்களை புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதுதான் அவர்களது வெற்றிக்கு காரணம்.
அவர்கள் இதுவரை ஐபிஎல் தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே அவர்களிடம் வெல்ல வேண்டும் என்கின்ற பசி இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி அவர்கள் ப்ளே ஆப் செல்ல உதவும். இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அந்த அணியின் பார்ம் சிறப்பாக இருக்கிறது. அந்த அணிக்கு வெல்ல வேண்டும் என்கின்ற பசி இருக்கிறது. கேப்டன் உட்பட மூத்த வீரர்கள் சிறப்பாக வருகிறார்கள்.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை பக்கத்துல இருக்கு.. ஹர்திக் பாண்டியா இந்த விஷயத்தை மாத்திக்கிட்டே ஆகனும் – ஷேன் வாட்சன் பேச்சு
மேலும் இளம் வீரர்களும் தொடர்ந்து வருகிறார்கள். நான் ஆர்சிபி அணியின் மொமண்டத்தை நம்புகிறேன். அவர்கள் அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்வார்கள். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறும்” என்று கூறியிருக்கிறார்.