ஆர்சிபி ஃபேன்ஸ் என் குடும்பம் வரைக்குமே திட்டுவாங்க.. ஆனா வெளியில வேற நடக்கும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
33
RCB

தற்பொழுது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்பொழுது ஆர்சிபி அணியில் தொடர்ந்து வரும் அவர் ஆர்சிபி ரசிகர்கள் பற்றி தனது கருத்தை கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டு டெல்லி அணியால் வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் பயணம், ஆர்சிபி, மும்பை மற்றும் கொல்கத்தா என சென்று தற்பொழுது மீண்டும் ஆர்சிபி அணிக்கே வந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா எழுத்தில் 5 கோடி ரூபாய்க்கு இவரை ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்கியது.

- Advertisement -

இதற்கு முன்பாக தினேஷ் கார்த்திக் 2015 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஆர்சிபி அணிக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு இவருடைய ஆட்டம் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதே சமயத்தில் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் இவருக்கு சரியாக அமையவில்லை.

பொதுவாக ஆர்சிபி அணி என்ற ரசிகர்களை மிகவும் விசுவாசமானவர்கள் என்று கூறுவார்கள். பதினாறு வருடங்களாக ஐபிஎல் தொடரில் அந்த அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் கூட, அந்த அணிக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தது கிடையாது. மும்பை மற்றும் சென்னை அணிக்கு சமமாக ரசிகர் பட்டாளம் மற்றும் வணிகத்தை வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆர்சிபி ரசிகர்கள் பற்றி பேசுகையில் “ஆர்சிபி ரசிகர்கள் உண்மையில் விசுவாசம் ஆனவர்கள். அவர்கள் ஒரு குடும்பம் மாதிரி. நான் நல்லது மற்றும் கெட்டது என இரண்டு வழிகளிலும் பார்க்கிறேன். என்ன நடந்தாலும் நான் விளையாட உள்ளே செல்லும் பொழுது அவர்கள் என்னை இந்த உலகத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் போல கொண்டாடுவார்கள். என்னை சிறந்த வீரர் போல உணர வைப்பார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மா கிடையாது.. இப்ப பெஸ்ட் ஓபனர் உலகத்துல இவர்தான் – குமார் சங்கக்கரா பேச்சு

நான் ஆர் சி பி அணிக்கு சரியாக செயல்படவில்லை என்றால் அதே ரசிகர் தனிப்பட்ட முறையில் என்னை தாக்குவார். அது என்னை மட்டும் இல்லாமல் என் குடும்பம் வரையில் கூட நீளும். ஆனால் அதே சமயத்தில் அவர்கள் ஒரு ஆர்சிபி வீரரை எப்பொழுதும் வெளியில் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.