தோனி கோலி வேறு வேறு முடிவு.. விமர்சித்த கைஃப்.. லைக் செய்த விராட் கோலி.. என்ன நடந்தது?

0
141
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஆர்சிபி அணி மொத்தம் ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்து ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. நேற்று தனது இரண்டாவது வெற்றியை பெற வேண்டிய நிலையில் ஒருவன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் தற்பொழுது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதுகுறித்து முகமது கைஃப் தன் கருத்தை கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 222 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து இலக்கை நோக்கி ஆரம்பித்த ஆர்சிபி அணிக்கு பவுண்டரியுடன் தன் ரன் கணக்கை விராட் கோலி அதிரடியாக தொடங்கினார். மேலும் ஒரு சிக்ஸரையும் அடித்தார். இதற்கு அடுத்து இரண்டாவது ஓவருக்கு வந்த மிட்சல் ஸ்டார்க் பந்திலும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

- Advertisement -

விராட் கோலி நேற்று வெற்றிக்கு தெளிவான பேட்டிங் அணுகுமுறையில் இருந்தார். இப்படியான நிலையில் ஹர்ஷித் ராணா வீசிய கிட்டத்தட்ட பீமர் போன்ற ஒரு பந்தில்,விராட் கோலி அவரிடமே கேட்ச் கொடுத்தார். எப்படியும் பந்து ஃபுல் டாஸ் நோ பாலாக இருக்கும் என எல்லோரும் நினைத்து இருந்தார்கள்.

இப்படியான நிலையில் நடுவர்கள் பந்து கிரிஸ்க்கு தரையிறங்கும் பொழுது, விராட் கோலியின் இடுப்பு உயரத்தை விட கீழே தான் இறங்கும் என தொழில்நுட்பத்தை வைத்து அளந்து, விராட் கோலிக்கு அவுட் கொடுத்தார்கள். இதை எல்லோருக்குமே ஆச்சரியத்தை அதிர்ச்சியையும் கொடுப்பதாக இருந்தது. இதனால் களத்தில் விராட் கோலி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டுதான் வெளியேறினார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “விராட் கோலிக்கு தெளிவாகவே விளையாட முடியாத பீமர் பந்தில் அவுட் கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் தோனியின் பேட்டுக்கு கீழே சென்ற பந்துக்கு வைடு கொடுக்கப்பட்டது. கேமராக்கள், ரீ-ப்ளேக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தும் தவறு செய்யப்படுகிறது. இது மோசமான அம்பயரிங்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவை முந்திய திலக் வர்மா.. அதிவேக ரன் குவிப்பில் அசத்தல் ரெக்கார்ட்.. மும்பை இந்தியன்ஸ் அணியை காப்பாற்றினார்

முகமது கைஃப் இந்த தீர்ப்பு குறித்து தனது விமர்சனத்தை நடுவர்கள் மீது வைத்த ட்விட் பதிவை விராட் கோலி லைக் செய்து தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக இந்த பிரச்சனை இன்னும் முடியாமல் சமூக வலைதளங்களில் பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.