சுரேஷ் ரெய்னாவை முந்திய திலக் வர்மா.. அதிவேக ரன் குவிப்பில் அசத்தல் ரெக்கார்ட்.. மும்பை இந்தியன்ஸ் அணியை காப்பாற்றினார்

0
155
Tilak

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் சந்திப் சர்மா ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியா ஆச்சரியம் அளிக்கும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 6(5), இஷான் கிஷான் 0(3) என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இரண்டு பவுண்டரிகள் உடன் 8 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முகமது நபி ஓரளவுக்கு அதிரடியாக விளையாடி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்து சிக்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி 52 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்தது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் நெகேல் வதேரா இருவரும் சேர்ந்து பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

சிறப்பாக விளையாடிய திலக் வர்மா

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியாக சிறப்பாக விளையாடிய நெகேல் வதேரா 24 பந்தில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்த நெகிழ் வதேரா கிடைத்த முதல் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதற்கடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 45 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில்ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஜெரால்ட் கோட்சி 0(1), டிம் டேவிட் 3(5) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

சரிவில் இருந்து மீண்டு வந்த மும்பை இந்தியன்ஸ் 200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்திப் ஷர்மா மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி மும்பை இந்தியன்ஸ் அணியை தடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. சந்தீப் சர்மா அபாரமாக பந்து வீசி நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டுமே தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : எதுக்கு ஜெய்ஸ்வால் கில்.. டி20 உலக கோப்பையில் இவங்கதான் இந்தியாவுக்கு ஓபன் பண்ணனும் – கங்குலி கருத்து

இந்தப் போட்டியில் திலக் வர்மா ஐபிஎல் தொடரில் தனது 33 வது இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை வேகமாக கடந்ததில் ரெய்னாவை முந்தி இருக்கிறார். இந்திய வீரர்களில் சச்சின் மற்றும் ருதுராஜ் 31 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்து முதல் இடத்தில் ஐபிஎல் தொடரில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து திலக் வர்மா 33 இன்னிங்ஸ், சுரேஷ் ரெய்னா மற்றும் ஜெய்ஸ்வால் 34 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.