2008 ஐபிஎல் ஏலத்துல.. சிஎஸ்கே வாங்கும்னு முட்டாள்தனமா நினைச்சுட்டு இருந்தேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
30
DK

இந்திய கிரிக்கெட் வாரியம் முதன் முதலாக ஐபிஎல் தொடரை 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு மகேந்திர சிங் தோனி வந்தார். அவர் எந்த அணிக்கான அடையாள வீரராகவும் இருக்க விரும்பவில்லை. இந்த நிலையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி உடன் போட்டியிட்டு சிஎஸ்கே அணி வாங்கியது. மேலும் அந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை வாங்கும் என்று நினைத்ததாக தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் தோனி வந்தார். ஏலத்திற்கு சென்றால் அதிக தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக யூகித்து, அவர் எந்த அணிக்கும் அடையாள வீரராக இருக்கவில்லை. அவர் நினைத்தது போலவே ஏலத்திற்கு வந்து ஆறு கோடி ரூபாய்க்கு மேல் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் சென்றார்.

- Advertisement -

இதில் சிஎஸ்கே அணியை உருவாக்குவதற்கான பொறுப்பில் மறைந்த விபி.சந்திரசேகர் இருந்தார். இவர் தான் மிகவும் உறுதியாக தோனிதான் வேண்டுமென்று இருந்து வாங்கியவர். அதற்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் வீரேந்திர சேவாக்கை வாங்க திட்டமிட்டு இருந்த தகவல் சமீபத்தில் வெளியில் கூறப்பட்டது.

இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில், தான் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் என்கின்ற காரணத்தினாலும், விபி.சந்திரசேகர் தனக்கு நன்றாக தெரிந்தவர் என்பதாலும், தன்னை சிஎஸ்கே அணி வாங்கும் என்று நினைத்ததாக தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும்பொழுது ” நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சிஎஸ்கே அணி நிர்வாகம் என்னை வாங்கும் என்று நினைத்தேன். இந்த காரணத்தினால் அப்படி ஒரு முட்டாள்தனமான அனுமானத்தைச் செய்தேன். விபி.சந்திரசேகருக்கு என்மேல் எப்பொழுதும் ஒரு சாப்ட் கார்னர் உண்டு. எனவே சிஎஸ்கே அணியை உருவாக்குவதில் இருந்ததால் நான் வாங்கப்படுவேன் என்றும் நினைத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய வீரர்கள்ல.. இவங்க ரெண்டு பேர் கூட மட்டும் சேர்ந்து தங்கவே மாட்டேன் – ரோகித் சர்மா சுவாரசிய பேட்டி

இந்த நிலையில் நானும் தோனியும் இந்திய அணிக்காக மெல்போனில் இருந்தோம். இப்படியான நிலையில் தோனி சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்டதாக தெரிந்ததும்தான், நான் சிஎஸ்கே அணியில் ஒரு அங்கமாக இருக்க மாட்டேன் என்பது புரிந்தது. ஏனென்றால் எங்கள் இருவருக்கும் ஒரே அணியில் இடம் இருக்காது என்பது எனக்கு தெரியும்” என்று கூறியிருக்கிறார். முதல் ஏலத்தில் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட இவர், இதுவரை ஆறு ஐபிஎல் அணிகளுக்கு விளையாடிய பொழுதும், சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை. கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்க முயற்சி செய்தபோது ஆர்சிபி வாங்கியது குறிப்பிடத்தக்கது.