டி20 உலககோப்பை ஐபிஎல் கிடையாது.. அங்க எங்க கைதான் ஓங்கி இருக்கும் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

0
984
Starc

நடப்பு ஐபிஎல் தொடரில் 24.75 கோடி ரூபாய்க்கு மிக அதிகபட்ச தொகைக்கு கொல்கத்தா அணிக்கு மிட்சல் ஸ்டார்க் வாங்கப்பட்டார். இப்படி அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஒருவர் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் நிகழ்வை நடத்தி காட்டி இருக்கிறார். மேலும் கோப்பையை வென்ற பிறகு டி20 உலகக்கோப்பையை குறித்து அவர் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

நேற்று 17வது ஐபிஎல் சீசனிங் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டை கைப்பற்றி மொத்த ஆட்டத்தையும் கொல்கத்தா அணியின் பக்கம் வைத்தார். ஆனால் அவருக்கு நடப்பு ஐபிஎல் சீசன் ஆரம்பப் போட்டிகள் சரியாக செல்லவில்லை.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதில் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கும் அதிகமாக அவர் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஓவர்கள் மீதமிருந்த பொழுது கொல்கத்தா கேப்டன் சில பல நேரங்களில் கடைசியில் அவருக்கு ஓவரையே கொடுக்கவில்லை. இப்படியான நிலையில் நாட் அவுட் போட்டி இரண்டிலுமே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி கொல்கத்தாவில் வெல்ல வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை குறித்து பேசிய மிச்சம் ஸ்டார் ” டி20 உலகக்கோப்பையில் ஐபிஎல் தொடர் போல இம்பேக்ட் பிளேயர் விதி இருக்காது. எனவே உங்களது ஆல்ரவுண்டர்களை நீங்கள் அதிகம் நம்ப வேண்டி இருக்கும். உங்கள் பேட்டிங் ஆல் ரவுண்டரை எட்டாவது இடத்தில் வைக்க முடியாது. மேலும் ஐபிஎல் தொடர் போல டி20 உலகக்கோப்பையில் பெரிய ஸ்கோர்கள் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லாததால் ஒரு பேட்டர் குறைவாக இருப்பார்.

பவர் பிளேவில் பேட்ஸ்மேன் தைரியமாக இருக்கிறார்கள். நாம் ஐபிஎல் தொடரில் பார்த்தது போல அடித்து விளையாடுகிறார்கள். குறிப்பாக விக்கெட்டுகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் வெஸ்ட் இண்டிஸ் விக்கெட்டுகள் இப்படி இருக்காது. அங்கு பந்துகள் திரும்பும். மேலும் உலகக் கோப்பையின் இரண்டாம் பகுதியில் பந்து தாழ்வாகவும் மெதுவாகவும் வரும். இதனால் பேட்ஸ்மேன்கள் களைப்படைவார்கள். ஐபிஎல் தொடரில் இருந்ததை விட டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சாளர்கள் எங்களின் கைகள் ஓங்கி இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : கொல்கத்தா ஐபிஎல் சாம்பியன்.. இவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. எல்லாமே இவர்தான் – ரிங்கு சிங் பேட்டி

கம்பீர் திட்டங்கள் தீட்டுவதில் அற்புதமானவர். அவர் இந்த அணி சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் நிறைய நேரம் இதற்காக செலவிட்டார். அவர் திட்டரீதியாக அணுகுவதிலும் மேலும் ஒரு விஷயத்தை அவதானிப்பதிலும் சிறந்தவராக இருக்கிறார். கேகேஆர் அணிவுடன் ஆன இந்த வெற்றிக்கு அவர் மிகவும் தகுதியானவர்” என்று கூறியிருக்கிறார்.