கொல்கத்தா ஐபிஎல் சாம்பியன்.. இவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. எல்லாமே இவர்தான் – ரிங்கு சிங் பேட்டி

0
106
Rinku

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக ரிங்கு சிங் இருந்தார். ஆனால் தொடரின் முடிவில் எல்லா வித்தியாசமாக நடைபெற்றது. இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ரிங்கு சிங் தனது அணியில் குறிப்பிட்ட ஒருவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ரிங்கு சிங் இளம் சூப்பர் ஸ்டாராக உருவானார். மிடில் வரிசையில் அல்லது ஃபினிஷிங் ரோலில் அவர் மிக அபாரமாக செயல்பட்டார். இதன் காரணமாக அவருக்கு இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைத்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு கொல்கத்தா அணியில் மிகச் சிறப்பாக இருக்கும், மேலும் அவர் பேட்டிங் வரிசையில் நான்காவதாக களம் வருவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஷயங்கள் இதற்கு நேர்மாறாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டு கம்பீர் கொல்கத்தா அணிக்கு மென்டராக வந்ததும் சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார். இதன் காரணமாக அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவர்களது இடத்தில் இருந்து இன்னும் கீழே இறங்க வேண்டி இருந்தது. பினிஷரான ரிங்கு சிங் பவுலிங் ஆல்ரவுண்டர் போல கீழே விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த ஆண்டு அவர் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 168 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 26. மேலும் இவருடைய ஆவரேஜ் 18 புள்ளி 67 என மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஒரே ஆறுதலாக ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 148 என்று இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கேகேஆர் அணிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து.. கோபமான தோனி ரசிகர்கள் விமர்சனம்.. காரணம் என்ன?

இந்த நிலையில் பேசி இருக்கும் ரிங்கு சிங் கூறும் பொழுது “எல்லாமே கடவுளின் திட்டம். இப்போது உணர்வு மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. நான் இந்த அணியில் ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த வெற்றியில் கம்பீர் சாரின் பங்கு மிகப் பெரியது. அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இறுதியாக ஐபிஎல் கோப்பையை உயர்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்