மும்பை இந்தியன்ஸ் கதையை முடிச்சிட்டாரு.. ஹர்திக்கை அவங்க கேப்டனாவே ஏத்துக்கல – இர்பான் பதான் விமர்சனம்

0
319
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு 99 சதவீதம் முடிந்து விட்டது. நேற்று அந்த அணி தங்களது சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 12 வருடம் கழித்து தோற்றது. இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன்சி முக்கிய காரணம் என இர்பான் பதான் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு ஐந்து விக்கட்டுகளை இழந்து விட்டது. இதனால் கொல்கத்தா மனிஷ் பாண்டேவை இம்பேக்ட் பிளேயராக உள்ளே கொண்டு வந்தது. இவர் வெங்கடேஷ் ஐயருடன் சேர்ந்து 62 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் பெறுவதற்கு காரணமாக இருந்தார். இதன் காரணமாகவே கொல்கத்தா அணி 169 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் மட்டுமே 56 ரன்கள் எடுத்தார். இறுதியாக அந்த அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மைதானத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் எட்டாவது தோல்வியாகும். எனவே அந்த அணி பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்று கூறலாம். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, ஒட்டுமொத்தமாக அந்த அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது. அவர்கள் பேப்பரில் சிறந்த அணியாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் களத்தில் சரியாக கேப்டனால் நிர்வகிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த எல்லா கேள்விகளும் நியாயமானவை. கேகேஆர் அணி 5 விக்கெட்டுகளை 57 ரன்னுக்கு இழந்தது. அப்போது அவர் மூன்று பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அதில் ஒருவர்ஆறாவது பந்துவீச்சாளர். இது கேகேஆர் அணி பார்ட்னர்ஷிப் அமைக்கட்டும் என்பது போல இருந்தது. அவர்களை 150ல் கட்டுப்படுத்தி இருந்தால் அதுதான் பெரிய வித்தியாசமாக இருந்திருக்கும். 170க்கு விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிக்கெட் வாழ்க்கையில்.. தோனி என் அப்பா மாதிரி – பதிரானா நெகிழ்ச்சி பேட்டி

கிரிக்கெட் என்பது கேப்டனும் நிர்வாகமும் சேர்ந்த ஒரு விளையாட்டு ஆகும். தற்பொழுது இந்த அணி ஒன்றாக சேர்ந்து ஒரே அணியாக விளையாடவில்லை. இதுதான் நடப்பு ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய பேசுபொருள்.வீரர்கள் கேப்டனை ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதுதான் நடந்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.