எல்லாமே உங்களாலதான்.. நீங்க கிரிக்கெட் பற்றி கவலைப்பட வேண்டாம்.. கொதித்து எழுந்த மிட்சல் ஸ்டார்க

0
562
Starc

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் காலையில் நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீடியாக்களை மிட்சல் ஸ்டார்க் சாடி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா வீரர் ஹேசில்வுட் இங்கிலாந்து அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறாமல் இருப்பது தங்களுக்கு நல்லது என்பதாக பேசியிருந்தார். மேலும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி வரை சென்று வெற்றி பெற்றால் கூட, இங்கிலாந்து அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்பதையும் கூறியிருந்தார்.

- Advertisement -

இது மீடியாக்களால் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை அடுத்த சுற்றுக்கும் முன்னேறாமல் செய்வதற்கு ஸ்காட்லாந்து அணிவுடன் தோற்பதற்காக விளையாடும் என்று பரப்பப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனங்கள் உண்டானது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்து இருந்தார். ஆஸ்திரேலியா அணி வெல்வதற்காக மட்டுமே விளையாடும் என்று கூறியிருந்தார். மேலும் ஹேசில்வுட் நகைச்சுவையாக கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் விளக்கி இருந்தார்.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா அணி வீழ்த்திய பிறகு பேசி இருக்கும் மிட்சல் ஸ்டார்க் “நீங்கள் மதர் கிரிக்கெட்டை பற்றியோ அல்லது போட்டியின் முடிவுகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம். நாங்கள் இங்கு வெல்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். இதுசர்வதேச கிரிக்கெட். மேலும் எங்களுக்கு எதிர் குழுவில் இங்கிலாந்து இருக்கிறது. எனவே அடுத்த மூன்று போட்டிகளில் நாங்கள் அவர்களுடன் மோதப் போவதும் கிடையாது. இதில் எந்த வித்தியாசமும் வரப்போவதில்லை. எனவே மீடியாக்கள் நீங்கள் உருவாக்கியது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் விராட் இல்லை.. கடினமான பிட்ச்களில் ரன் அடிக்கப் போறது இந்த இந்திய வீரர்தான் – மஞ்ரேக்கர் உறுதி

எனக்கு ஒமான் அணிக்கு எதிரான போட்டியில் தசைப்பிடிப்பு இருந்தது. மேலும் அது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தது. எனவே நான் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்பொழுது நன்றாக இருந்ததால் நான் போட்டிக்கு திரும்பி வந்தேன். இரண்டாவது சுற்றில் ஓய்வெடுப்பதை விட முதல் சுற்றில் ஓய்வெடுப்பது நல்லது” என்று கூறியிருக்கிறார்.