ஐபிஎல்.. ஹர்திக் பாண்டியா அண்ணனை கழட்டிவிட்ட லக்னோ.. புதிய துணை கேப்டனை அறிவித்தது

0
387
Krunal

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக, ஐபிஎல் தொடரில் எட்டு அணிகளுக்கு பதிலாக கூடுதலாக இன்னும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

புதிய இரண்டு அணிகளாக லக்னோவை தலைமையாகக் கொண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் குஜராத்தை அடையாளமாகக் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வந்தன.

- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன்பாக கேஎல்.ராகுலை வாங்கி கேப்டன் ஆகவும் நியமித்தது. கடந்த இரண்டு ஐபிஎல் சீசனிலும் அவர் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி இருக்கிறார்.

மேலும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிப்பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருந்தது.

கடந்த ஐபிஎல் சீசனில் கேஎல்.ராகுல் கடைசிக்கட்டத்தில் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அவர் இல்லாத நேரத்தில் ஹர்திக் பாண்டியா அண்ணனான க்ருனால் பாண்டியா லக்னோ அணியை வழிநடத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது கேஎல்.ராகுல் மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் என்ன நடக்கும்? என்று உறுதியாகக் கூற முடியவில்லை.

எனவே லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் இல்லையென்றால் வழிநடத்தக்கூடிய சரியான கேப்டன் தேவைப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா டி20 லீக்குகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற நிக்கோலஸ் பூரனை லக்னோ அணி நிர்வாகம் துணை கேப்டனாக அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க : “பொறுங்க எல்லாரும் தோனி ஆகிட முடியாது.. இந்த பையன் 3 ஃபார்மேட் விளையாடுவான்” – கங்குலி பேட்டி

பரோடா மாநில அணியை கேப்டனாக வழிநடத்தியும், கடந்த சீசனில் கே எல் ராகுல் இல்லாத பொழுது லக்னோ அணியை வழிநடத்தியும் இருந்த ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் க்ருனால் பாண்டியாவை லக்னோ அணி நிர்வாகம் துணை கேப்டனாக கொண்டு வராதது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.