நட்சத்திரங்கள் கிடையாது.. இந்த 2 வீரர்கள்தான் டி20 உ.கோ-யை ஜெயிச்சு தருவாங்க – ரவி சாஸ்திரி பேட்டி

0
653
Ravi

இந்தியாவில் இந்த மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் முடிவு அடைந்ததும், அடுத்து ஜூன் மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் நட்சத்திர வீரர்களை தாண்டி இரண்டு புதுமுக வீரர்கள்தான் இந்திய அணிக்கு முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

தற்போது டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் இந்திய பேட்டிங் யூனிட்டில் அனுபவ வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் புதுமுக வீரர்களாக முதல்முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவரும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வெற்றிக்கு எப்படி முக்கிய காரணமாக இருக்க முடியும்? என்பது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நீங்கள் கவனிக்க வேண்டிய இரண்டு ஜென்டில்மேன்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருமே. இடதுகை பேட்ஸ்மேன். இருவருமே முதல் உலகக் கோப்பையை விளையாடுகிறார்கள். அதில் ஒருவர் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால். அவரைப் பற்றி நன்றாக தெரியும், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். டாப் ஆர்டரின் உச்சத்தில் இடதுகை வீரராக இருக்கிறார், அவர் பயமில்லாமல் தன்னுடைய ஷாட்களை விளையாடுவார்.

ஆனால் மிடில் ஆர்டரில் ஒருவர் இருக்கிறார் அவரை எல்லோரும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். ஏனென்றால் அவர் மிகவும் எதிரணிக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். அவர்தான் சிவம் துபே. அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் வேடிக்கையாக சிக்ஸர்கள் அடிக்க கூடியவர். சுழல் பந்துவீச்சு வரும்பொழுது மிக அனாயசமாக சிக்ஸர்கள் அடிப்பார். அதை தொடர்ந்து செய்வார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஆசிய கோப்பையில் மைதான ஊழியர்களுக்கு பணம் கொடுக்க.. இவர்கள்தான் காரணம் – முகமது சிராஜ் பேட்டி

மேலும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் ஒரு முக்கியமான வீரராக இருப்பார். நீங்கள் ஏதாவது மந்தமான நிலையில் இருந்தால் அதை மாற்ற உங்களுக்கு ஒரு வீரர் வேண்டும். இவரால் 20 முதல் 25 பந்துகளில் ஆட்டத்தை பெரிய அளவில் மாற்ற முடியும்” என்று கூறியிருக்கிறார்.