ஹசரங்கா விளையாட அதிரடி தடை.. ஏற்றுக்கொள்ள வேண்டும் என பயிற்சியாளர் பேச்சு.. என்ன நடந்தது?

0
140
Hasaranga

ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. இந்த மூன்று தொடர்களையும் இலங்கை அணியை வென்றது.

இறுதியாக இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடிய பொழுது, முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது.

- Advertisement -

இலங்கை அணியின் மூன்றாவது போட்டி தோல்விக்கு அம்பயர் ஒரு நோபால் கொடுக்காதது முக்கிய காரணமாக அமைந்தது. இல்லையென்றால் மூன்றாவது போட்டியையும் இலங்கை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

இதுகுறித்து இலங்கை டி20 அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா நடுவர்களை விமர்சித்துக் கூறும் பொழுது, சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு மோசமாக இருக்கக் கூடாது, அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வேறு ஏதாவது வேலைக்கு போகலாம் என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதன் காரணமாக அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது, அதில் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட ஐசிசி தடை விதித்திருக்கிறது. இந்த தடை நிச்சயம் இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவை தொடரில் உருவாக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் கூறும் பொழுது “அவர் இரண்டு போட்டிகளுக்கு விளையாட முடியாது. நாம் இதைச் சமாளித்துதான் ஆக வேண்டும். அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றுக் கொண்டார். இப்போது செய்ய வேண்டியது எல்லாம் முன்னேறி செல்வது மட்டும்தான். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் விளையாடக்கூடிய வீரர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கலாம்.

நியாயமாக சொல்வதாக இருந்தால் நாங்கள் சில நல்ல டி20 கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். எனவே எங்கள் திட்டங்களை சரியாக வகுத்து, நாங்கள் ஒரு தனியாகவும் தனிப்பட்ட வீரர்களாகவும் வளர வேண்டும்.

இதையும் படிங்க : “ஜடேஜாகிட்ட அந்த ரகசியத்தை கேட்டு பாருங்க.. அப்புறம் வெறுத்துடுவிங்க” – ஆஸி பிராட் ஹாடின் பேச்சு

இறுதியாக வருகின்ற உலகக் கோப்பையில் நாங்கள் எங்களுடைய பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? அதாவது நாங்கள் இலங்கையர்கள், நாங்கள் இலங்கையர்கள் போல விளையாட வேண்டும் என்று சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.