கடவுள்கிட்ட இருந்து பொறுப்பு கிடைச்சிருக்கு.. ருதுராஜ் இதை பண்ணா மட்டுமே தப்பிக்க முடியும் – மைக்கேல் வாகன் பேட்டி

0
108
Ruturaj

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக ருதுராஜ் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். 58 பந்துகளை எதிர் கொண்ட அவர் 67 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டனாக அவருக்கு எது முக்கியம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறிவுரை கூறியிருக்கிறார்.

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதல் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் மகேந்திர சிங் தோனியால் கொண்டுவரப்பட்டார். இதற்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளை சிஎஸ்கே அணி வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் வெளி மைதானங்களில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளிடம் சிஎஸ்கே தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்தது. நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி இரண்டில் தோல்வி என திடீரென சிஎஸ்கே அணிக்கும் அந்த அணியின் கேப்டனுக்கும் ஒரு நெருக்கடி உருவானது.

இப்படியான நிலையில் தான் நேற்று மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பிய சிஎஸ்கே அணி மிகச் சிறப்பாக விளையாடி கேகேஆர் அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி ஒன்றை பெற்று இருக்கிறது. புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும் வலிமையாக தொடர்கிறது.

இந்த சூழ்நிலையில் ருதுராஜுக்கு கேப்டனாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அவர் ஒரு கடவுளிடமிருந்து பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது தோனி இன்னும் அணியில் தொடர்கிறார். இது ருதுராஜுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். அதே சமயத்தில் தோனி கேப்டன் பொறுப்பில் தொடர முடியாத நிலையில்தான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இடத்தை நிரப்புவது பெரிய வேலைனு சொல்லுவாங்க.. ஆனா சிஎஸ்கே-ல இதுதான் நடக்குது – ருதுராஜ் பேட்டி

ருதுராஜ் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து நான் பார்க்கவில்லை. நான் அவருக்குச் சொல்லும் ஒரு அறிவுரை உங்களால் முடிந்த மட்டும் ரன்களை எடுத்துக் கொண்டே இருங்கள். அவரால் அப்படி செய்ய முடிந்தால் அவர்களது அணி சிறப்பாக இருக்கும். அணியின் வெற்றிதான் நல்ல உணர்வை பெறுவதற்கான சிறந்த வழி” எனக் கூறியிருக்கிறார்.