தோனி இடத்தை நிரப்புவது பெரிய வேலைனு சொல்லுவாங்க.. ஆனா சிஎஸ்கே-ல இதுதான் நடக்குது – ருதுராஜ் பேட்டி

0
129

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு கேப்டனாக அணியில் பராமரிக்க விரும்பும் விஷயங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் குவித்தார். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரட்சின் ரவீந்தரா விரைவிலேயே ஆட்டம் இழந்தாலும் அணியின் கேப்டன் ருதுராஜ் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நிதானமாக சென்னை அணியை கரை சேர்த்தார். நிதானமாக விளையாடினாலும் அவ்வப்போது எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவதை அவர் தவறவிடவில்லை.

58 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரரிகளை விளாசி 67 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் மகேந்திர சிங் தோனியோடு ஆட்டத்தை வெற்றிகரமாகவும் முடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி இப்போட்டியின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

போட்டிக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க் வாட் கேப்டனாக தோனியின் மிகப்பெரிய இடத்தினை நிரப்ப முயற்சிப்பதை விட, அணியில் நேர்மறையான கலாச்சாரத்தை பின்பற்ற விரும்புவதாக கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது ” நான் ஒரு குறிப்பிட்ட நபராக இருக்க விரும்பவில்லை. குறிப்பிட்ட விஷயங்களை அதன் வழியிலேயே விட்டுவிடுவது நல்லது.

- Advertisement -

சிஎஸ்கே அதன் நேர்மைறையான அடிப்படை கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறது. அதைத்தான் தற்போது நான் உணர்கிறேன். நாங்கள் பின்பற்றும் விஷயங்கள் எங்களுக்கு வெற்றியை தருகிறது. அதனால் அதில் துளியையும் மாற்ற நான் விரும்பவில்லை.மேலும் எனது சொந்த முடிவுகளை எடுக்கவும், அணியில் முடிந்தவரை சுதந்திரம் கொடுக்கவும் விரும்புகிறேன். ஏனெனில் நான் சென்னை அணியில் சேர்ந்ததில் இருந்து தற்போது வரை இதுதான் நடக்கிறது.

இதையும் படிங்க:பேட்டிங் வரது போல ஜடேஜா பிராங்க் பண்ணல.. பண்ண சொன்னது தோனி பாய் – உண்மையை உடைத்த துஷார் தேஷ் பாண்டே

உண்மையாக எதுவுமே மாறவில்லை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை அணியில் கேப்டன் பதவி மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. ஒரு விஷயத்தை கூற வேண்டும். நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மகேந்திர சிங் தோனி கேப்டன்சி குறித்து அனைத்து விஷயங்களும் என்னிடம் கூறினார். வெளிப்படையாக வெளியில் உள்ள அனைவரும், தோனியின் இடத்தை நிரப்புவது பெரிய வேலை என்று கூறுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். மேலும் அணியில் தற்போது இருக்கும் கலாச்சாரத்தையே தொடர விரும்புகிறேன்”என்று கூறியிருக்கிறார்.