யாரும் பார்த்திராத தோனி சிக்ஸர்.. போட்டி முன்பே கணித்த மைக் ஹசி.. ருசிகர நிகழ்வு

0
1439

விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றாலும், மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் சென்னை அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் கூறிய வார்த்தைகள் உண்மையாகியது.

டெல்லி அணியின் சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த முறை சிறப்பாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா 43 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், அதற்கு பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்றார்.

- Advertisement -

இதனால் டெல்லி அணி 191 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ரிஷப் பன்ட் தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பிறகு கடினமான இலக்கை எதிர்கொண்ட சென்னை அணி தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் அனுபவ வீரர்கள் ரகானே மற்றும் டாரி மிச்சல் ஆகியோர் சென்னை அணியை ஓரளவு கரை சேர்த்த முயற்சித்தனர். இருப்பினும் அந்த முயற்சி தோல்வியில் முடிய 24 பந்துகளில் 72 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

தான் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுன்டரிக்கு விளாசி ரசிகர்களை உற்சாகமூட்டினார். கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தோனி களம் இறங்கியதால் ரசிகர்களின் ஆரவாரம் ஆர்ப்பரித்தது. 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் மூன்று சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகளுடன் 37 ரன்கள் குவித்தார்.

போட்டி முன்பே கணித்த மைக் ஹசி

இருப்பினும் கடைசி கட்ட நேரத்தில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு பந்துகள் இல்லாததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து முடிப்பார் என்று கணித்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

அவர் சொன்னதைப் போலவே நோக்கியா கடைசி ஓவர் வீச, அதை எதிர்கொண்ட மகேந்திர சிங் தோனி அந்த ஓவரில் இருபது ரன்களை குவித்தது மட்டுமில்லாமல் கடைசி பந்தில் ரசிகர்களின் ஆவாரங்களுக்கு மத்தியில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தினை முடித்தார். அதுவரை அப்படி ஒரு சிக்சரை அவர் கவர் திசையில் அடித்து யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே மைக்கேல் ஹசி சொன்ன கருத்துக் கணிப்பு 100% உண்மையில் முடிந்திருக்கிறது.

இதையும் படிங்க: சிஎஸ்கே மட்டும் 14 போட்டியையும் அங்க ஆடுறாங்க – டெல்லி கேப்பிட்டல்ஸ் கலீல் அகமது பேட்டி

சென்னை அணி20 ரன்கள் தோல்வி அடைந்ததன் மூலம் அதில் நெட் ரன் ரேட்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது முதல் இடத்தில் நீடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.