சிஎஸ்கே மட்டும் 14 போட்டியையும் அங்க ஆடுறாங்க – டெல்லி கேப்பிட்டல்ஸ் கலீல் அகமது பேட்டி

0
553
Khaleel Ahmed about CSK

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இருப்பினும் சென்னை அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது தோனி குறித்தும், சென்னை ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்தும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

டெல்லி அணியின் சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள் இந்த முறை அபாரமாக நிலைத்து நின்று விளையாடினார்கள். அனுபவ வீரர் டேவிட் வார்னர் 52 ரன்களும், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 43 ரன்களும் குவித்து வெளியேறினார்கள். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் அனுபவ வீரர்களான ரகானே மற்றும் டாரி மிச்சல் ஆகியோர் சிறிது நேரம் தாக்கு பிடிக்க, 24 பந்துகளில் 72 ரன்கள் சென்னை அணிக்கு தேவை என்ற நிலையில் மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார்.

அவர் மைதானத்திற்குள் களமிறங்கியதும், சென்னை அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் டெல்லி அணியின் ரசிகர்களுமே ஆரவாரத்தில் கரகோஷம் எழுப்ப தொடங்கினர். ரசிகர்களின் உற்சாகங்களுக்கு மத்தியில் விளையாடிய தோனி 231 ஸ்ட்ரைக் ரைட்டில் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும்.

இதில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமதுவின் ஓவரில் ஒரு அபாரமான சிக்ஸரை பறக்க விட்டார் தோனி. இருப்பினும் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு டெல்லி அணியின் வேகப்பந்து பேச்சாளர் கலில் அகமது கூறும் பொழுது
“சென்னை அணி தனது 14 போட்டிகளையும் அதன் சொந்த மைதானங்களிலேயே விளையாடுவது போல் உள்ளது.

- Advertisement -

நாங்களும் அதை மதிக்கிறோம். நாங்களும் அதனை ரசிக்கிறோம். ஏனென்றால் மகேந்திர சிங் தோனி எங்களது கேப்டனாக இருப்பதால் இது எங்களுக்கு வேடிக்கையாக உள்ளது. ஆனால் டெல்லி ரசிகர்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த போட்டியின் முடிவு அவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எங்கள் அணியில் உள்ள அனைவரது முகத்திலும் புன்னகை இருக்கிறது.

இதையும் படிங்க: என்ன அழகு.. தோனிக்கு தோற்றாலும் அது எவ்வளவு முக்கியம்னு தெரியும் – சிஎஸ்கே கோச் பிளமிங் பேட்டி

நீங்கள் வெற்றி பெறும் போது உங்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். அது நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகளையும் வெளிக்கொண்டு வருகிறது. எனவே இந்த வெற்றி எங்களுக்கு நேர்மறையான சூழலை உருவாக்கி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.