67 பந்தில் 100 ரன்.. கோலி மீது தப்பே இல்ல.. ஆர்சிபி தோக்க காரணமே அவங்க தான் – மைக்கேல் கிளார்க் அதிரடி பேட்டி

0
1697

நேற்று ராஜஸ்தான் மாநிலம் சவாய்பூர் மான்சிங் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மெதுவாக இருந்தது என்று புகார் எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் விராட் கோலிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதில் கேப்டன் டூ பிளசிஸ் 33 பந்துகளில் 44 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு வந்த மேக்ஸ்வெல் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பர்கரின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அவருக்குப் பிறகு வந்த சௌகான் ஒன்பது ரன்களில் வெளியேற, விராட் கோலி ஒரு முனையில் நின்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும், தனது சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். முதலில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி பின்னர் விக்கட்டுகள் இழந்த காரணத்தால் ஆட்டத்தை அதிரடியாக கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

67 பந்துகளில் சதம் விளாசிய அவர், 73 பந்துகளில் 12 பவுண்டரிகள் நான்கு சிக்சர்கள் என 112 ரன்கள் விளாசினார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாட ஆரம்பித்தது. ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினாலும் அதற்கு பின்னர் களம் இறங்கிய சஞ்சு சாம்ன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக விளையாடிய பட்லர் 58 பந்துகளில் சதம் விளாசினார்.

மைக்கேல் கிளார்க் கோலிக்கு ஆதரவு

இந்த நிலையில் பெங்களூர் அணியின் தோல்விக்கு விராட் கோலியின் மந்தமான ஆட்டமே காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தற்போது கோலிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கருத்து கூறும் பொழுது “நான் இதில் விராட் கோலியை விமர்சிக்க மாட்டேன். அவர் புத்திசாலித்தனமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரைச் சுற்றியுள்ள பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை குவிக்கவில்லை என்பதை உண்மை. மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி இருந்தால் விராட் கோலி மெதுவாக ஆட வேண்டிய சூழ்நிலைக்கு சென்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

மேலும் பெங்களூர் அணி 15 ரன்கள் குறைவாக எடுத்தது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அது உண்மைதான்.அவர்களின் சில முடிவுகள் கடினமாக இருந்தது. ஆட்டத்தை இறுதி கட்டத்தில் அதிரடியாக எடுத்துச் செல்லக்கூடிய திறமை தினேஷ் கார்த்திக்கிடம் இருக்கிறது.

இதையும் படிங்க:இந்திய அணியின் சாதனையை முறியடித்த ஆர்சிபி.. ஒட்டுமொத்த உலக டி20 அணிகளில் மெகா ரெக்கார்டு

எனவே மேக்ஸ்வெல்லுக்கு பின்னர் அவர்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை” என கூறி இருக்கிறார். என் தோல்வியின் மூலம் பெங்களூர் அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.