தோனி செய்ய வேண்டியது இதை மட்டும்தான்.. மத்தவங்க சொல்ற மாதிரி கிடையாது – மைக்கேல் கிளார்க் பேச்சு

0
918
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தோனி பேட்டிங் வரிசையில் மேலே வர வேண்டுமா? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளை வெளி மைதானத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இரண்டு தோல்விகள் தொடர்ச்சியாக வந்திருக்கின்ற காரணத்தினால், இன்று சொந்த மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்பீர் மென்டராக வந்த பிறகு பெரிய வலிமையான அணியாக உருவெடுத்திருக்கிறது. அந்த அணி தாக்கி விளையாடுவதை அணுகுமுறையாக வைத்திருக்கிறது. எதிரணியின் பந்துவீச்சு வரிசையை அதிரடி பேட்டிங்கால் உடைப்பது அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட் பலவீனமாக இருப்பது பின்னடைவாக அமைகிறது.

எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக, தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாடினால் சரியாக இருக்குமா? என்பது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெற்றது.

- Advertisement -

இதில் இது குறித்து முதலில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ” தோனி பேட்டிங் வரிசையில் முதலில் வரவேண்டும் என்றால், டேரில் மிட்சல், சிவம் துபே ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்பாகவா?இது நிச்சயம் ஒரு சிறந்த முடிவாக இருக்க முடியாது. அவர் கடந்த ஐபிஎல் சீசனில் என்ன செய்தாரோ அதையே செய்தால் போதும். இப்பொழுது கூட கடைசிக் கட்டத்தில் வந்து 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். அவர் இப்பொழுது விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருப்பது, ருதுராஜை வழிநடத்துவது, கடைசி கட்டத்தில் இம்பாக்ட் தரக்கூடிய வகையில் சில பந்துகளை விளையாடி ரன் எடுப்பது மட்டும்தான்” கூறினார்.

இதையும் படிங்க : ஒன்னு இருந்தா ஒன்னு இருக்க மாட்டேங்குது.. ஹர்திக் பாண்டியா கில் கேப்டன்சி வித்தியாசம் இதான் – விஜய் சங்கர் பேட்டி

இதற்கு பதில் அளித்து பேசிய மைக்கேல் கிளார்க் “நீங்கள் மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் மஞ்ச்ரேக்கர். தோனி வழக்கமாக ஒரு ஃபினிஷர். அதை அவர் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வந்திருக்கிறார். எனவே அவர் இதை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை கிடையாது. இப்பொழுது வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும். அணி ரிஸ்க் எடுக்க வேண்டும். இது மற்ற வீரர்கள் செயல்பட வேண்டியதற்கான நேரம். தோனி அவருடைய இடத்தில் விளையாடினால் போதும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -