“ஜெய்ஸ்வால பார்த்து பேசுப்பா.. பாண்டிங் ஹைடன பார்த்திருக்கியா?” – டக்கெட்டுக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி

0
1233
Clarke

இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட், எதிரணி வீரர்கள் தங்களுக்கு எதிராக விளையாடும் பொழுது, தங்களைப் பார்த்து அதிரடியாக விளையாடுகிறார்கள் என்றும், அதற்கான பெருமையில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்றும், ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை வைத்து பேசியிருந்தார்.

அவருடைய பேச்சில் தங்களுடைய பாஸ்பால் அணுகுமுறையின் மீதான கௌரவம் பெரிதாக வெளிப்பட்டது. தாங்கள் தான் உலகிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாட ஊக்கப்படுத்துவது போல பேசியிருந்தார்.

- Advertisement -

உண்மையில் தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகுவதற்கான விதையைப் போட்டவர் இந்தியாவின் ரிஷப் பண்ட்தான். அணி எந்த நிலையில் இருந்தாலும் அவர் அதிரடியாக மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினார். இவருக்கு முன்பான காலத்தில் ஷேவாக் அப்படியான ஆட்டத்தை விளையாடினார்.

இன்னொரு பக்கத்தில் 2000ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணி தேவைப்படும் நேரங்களில் பாஸ் பாலை விட வேகமாக ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவர்கள் விரும்புகின்ற வகையில் விளையாடியவர்கள்.

இப்படி இருக்கும் பொழுது இங்கிலாந்து அணி தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆக்ரோஷமாக விளையாட ஊக்கப்படுத்துவது போலான டக்கெட் பேச்சுக்கு இங்கிலாந்தில் இருந்தே மைக்கேல்வாகன் மற்றும் நாசர் ஹுசைன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இணைந்து கூறும் பொழுது “அவர் ஆஸ்திரேலியா விளையாடிய விளையாட்டை 20 வருடங்களாக தவற விட்டிருக்க வேண்டும். இளைஞராக அவருக்கு ஆஸ்திரேலியா எப்படி ஆன டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியது என்று தெரியவில்லை. அவர் மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஸ்லாட்டர், ஆடம் கில்கிரிஸ்ட் பற்றியவர்களை அறிந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

நீங்கள் மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களை விளையாடுவதால் மட்டுமே ஆக்ரோஷமாக விளையாடுகிறீர்கள் என்கின்ற அர்த்தம் கிடையாது. மேத்யூ ஹைடன் வெகு சாதாரணமாக இறங்கி வந்து உங்கள் தலைக்கு மேலே சிக்சர் அடிப்பார். அவரிடம் எந்த மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களும் கிடையாது.

இதையும் படிங்க : “ஒரு பக்கம் தோனி.. ஐபிஎல்-ல் கம்பீர்.. 2 பேரால என் கிரிக்கெட் வாழ்க்கையே வீணாயிடுச்சு” – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

ஒரு பேட்ஸ்மேன் ஆக உங்களுடைய வேலை ரன்கள் அடிப்பது மட்டும்தான். கிரிக்கெட் உலகில் ஏராளமான சிறந்த வீரர்கள் சிறந்த அணிகளுக்கு எதிராக ரன்கள் குவித்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாக மற்றும் பாசிட்டிவாக விளையாடுவதில் இங்கிலாந்து முதல் அணி கிடையாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” என கூறியிருக்கிறார்.