அபிஷேக் சர்மாவுக்கு நான் பந்து வீச மாட்டேன்.. உண்மையாவே பயமா இருக்கு – பாட் கம்மின்ஸ் பேச்சு

0
389
Cummins

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை தங்களது சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தி மொத்தம் 17 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். இது குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் துவக்க வீரராக வந்து அதிரடியாக விளையாடி, 45 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு இந்த முறை ஹெட் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். ஆனாலும் இன்னொரு அதிரடி துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை மிரட்டினார். அவர் பேட்டில் இருந்து பந்துகள் தெறித்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து, 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவர் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்தி விளையாடிய ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போதைக்கு புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் போட்டி முடிவுக்கு பின் எந்த இடத்தில் நீடிக்கும் என்பது தெரிய வரும்.

இந்த போட்டியின் வெற்றிக்குப் பின் பேசிய ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் “இது மிகவும் அருமையாக இருக்கிறது. நாங்கள் ஹைதராபாத் மைதானத்தில் 7 போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்றிருக்கிறோம். இந்த சீசனில் பல வீரர்கள் சிறப்பாக வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. மேலும் இந்த பெரிய கூட்டம் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. குறிப்பாக அபிஷேக் சர்மாவுக்கு எதிராக பந்து வீச விரும்பவில்லை. அவர் வேகப்பந்துவீச்சாளர்களையும் அடிக்கிறார் சுழல் பந்துவீச்சாளர்களையும் அடிக்கிறார். அதைப்பார்க்க பயமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியின் 8 வருட சாதனை.. இந்த வருட சாதனை.. இரண்டையும் உடைத்த அபிஷேக் ஷர்மா.. அசத்தல் ரெக்கார்ட்

நிதீஷ் குமார் ஒரு கிளாஸ் பிளேயர். வயதுக்கு முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டு இருக்கிறார். அவர் எங்களின் டாப் ஆர்டருக்கு ஏற்றவர். உண்மையிலேயே எனக்கு திருப்தியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. நான் இதுவரையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியது கிடையாது. மேலும் எங்களுடன் பிளே ஆப்பில் விளையாடப் போவது யார் என்று சற்று நேரத்தில் தெரியும். நிஜமாகவே நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறேன். அடுத்து நடக்கப் போவது குறித்து உற்சாகமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.