தோனி உடன் ஆர்சிபி வீரர்கள் கை குலுக்காதது பெரிய தவறு.. இது நாகரிகமே கிடையாது – மைக்கேல் வாகன் விமர்சனம்

0
929
Dhoni

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும்சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், போட்டி முடிந்து இறுதியில் தோனி கை குலுக்காமல் சென்று விட்டார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கு நடந்த விஷயங்கள் வேறாக இருக்கிறது. இது குறித்து மைக்கேல் வாகன் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

நேற்று கால் இறுதிப் போன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலையில், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதன் காரணமாக சிஎஸ்கே அணி நேற்று பிளே ஆப் வாய்ப்புக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த போட்டியில் போட்டி முடிந்த பிறகு மகேந்திர சிங் தோனி ஆர்சிபி வீரர்களுடன் கை கொடுக்காமல் சென்று விட்டார் என சமூக வலைதளத்தில் சிலர் விமர்சனங்கள் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று மகேந்திர சிங் தோனி கை கொடுப்பதற்காக நின்று காத்திருந்த பொழுது, மைதானத்தில் விளையாடிய ஆர்சிபி ரசிகர்கள் அதிகப்படியான வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கை கொடுப்பதற்காக சிஎஸ்கே வீரர்களிடம் வரவில்லை. இதனால் தோனி தன் வீரர்களிடம் சொல்லிவிட்டு ஓய்வருக்குச் சென்று விட்டார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து கண்டனத்தை தெரிவித்திருக்கும் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” நேற்று தோனியின் கடைசி ஆட்டமாக இருந்ததா என்று என்பது குறித்து நமக்கு தெரியாது. அந்த வீரர்கள் தோனிக்காக காத்திருக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள். இங்கே லெஜன்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் இருக்கிறது நாம் கைகுலுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

இதையும் படிங்க : 214 ரன்.. அபிஷேக் சர்மா அதிரடியில் ஹைதராபாத் வெற்றி.. 2வது இடத்துக்கு ராஜஸ்தானுக்கு நெருக்கடி

நீங்கள் முதலில் அவருடன் கை குலுக்கி விட்டு பிறகு உங்களுடைய வெற்றி கொண்டாட்டங்களை செய்திருக்க வேண்டும். முதலில் தோனியிடம் சென்று கைகுலுக்கும் கண்ணியம் இவர்களுக்கு இல்லை” என்று அவர் கொஞ்சம் கடுமையாகவே விமர்சனம் செய்திருக்கிறார். தற்பொழுது கை குலுக்காமல் சென்ற விஷயத்தில் தோனி மீது தவறு கிடையாது என்பது தெரிய வருகிறது.

- Advertisement -