கோலியின் 8 வருட சாதனை.. இந்த வருட சாதனை.. இரண்டையும் உடைத்த அபிஷேக் ஷர்மா.. அசத்தல் ரெக்கார்ட்

0
324
Abhishek

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி கொண்ட போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா விராட் கோலியின் இரண்டு சாதனைகளை முறியடித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ரூசோவ் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடியாக ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 21 பந்தில் அதிரடியாக அரைசதம் அடித்தார். மொத்தம் 28 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்தார். இவர் ஏற்படுத்தித் தந்த சிறப்பான அடிப்படையில், ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது.

மேலும் இந்தப் போட்டியில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததின் மூலமாக மொத்தம் இந்த ஐபிஎல் தொடரில் 39 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மூலமாக 8 ஆண்டுகளுக்கு முன்னால் 2016 ஆம் ஆண்டு, விராட் கோலி 38 சிக்ஸர்கள் அடித்து, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை படைத்திருந்ததை உடைத்து இருக்கிறார்.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விராட் கோலி மொத்தம் 37 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 39 சிக்ஸர்களை எட்டியதன் மூலமாக அபிஷேக் சர்மா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து இருந்த பட்டியலில் விராட் கோலியை கீழே இறக்கி முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி உடன் ஆர்சிபி வீரர்கள் கை குலுக்காதது பெரிய தவறு.. இது நாகரிகமே கிடையாது – மைக்கேல் வாகன் விமர்சனம்

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அபிஷேக் ஷர்மா மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 39 ரன் சராசரியில் 467 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்டிரைக் ரேட் 209என்று பிரம்மாண்டமாக இருக்கிறது. இவரும் ஹெட்டும் சேர்ந்து கொடுத்து வரும் அதிரடியான தொடக்கம்தான் ஹைதராபாத்தை பிளே ஆப் சுற்றில் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.