“ஒரு பக்கம் தோனி.. ஐபிஎல்-ல் கம்பீர்.. 2 பேரால என் கிரிக்கெட் வாழ்க்கையே வீணாயிடுச்சு” – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

0
177
Gambhir

இந்திய கிரிக்கெட்டில் கடந்த இரு தசாப்தத்தில் திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வீரர்களில் இர்ஃபான் பதான் மனோஜ் திவாரி மற்றும் தற்போது ஷிகர் தவான் ஆகியோர் முக்கியமானவர்கள்.

தனக்கு வழங்கப்பட்ட குறுகிய வாய்ப்பில் பேட்டிங்கில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தும், பந்துவீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்றியும் இருந்த மனோஜ் திவாரிக்கு இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி தொடர்வாய்ப்புகள் தரவில்லை. அதே சமயத்தில் அந்த நேரத்தில் ரன்கள் எடுக்காத ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இது குறித்து நேற்று ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட மனோஜ் திவாரி தன்னுடைய மனக்குறையை வெளிப்படுத்தி பேசி இருக்கிறார். இதுகுறித்து மகேந்திர சிங் தோனியிடம் அன்பாகவே தனக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்று கேட்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக கவுதம் கம்பீர் மட்டுமே இருந்து வருகிறார். 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.

இதில் 2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பவுண்டரி அடித்து மனோஜ் திவாரி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். ஆனால் 2014ஆம் ஆண்டு மீண்டும் கொல்கத்தா அணி கோப்பையை வென்ற பொழுது அவர் அந்த அணியில் இல்லை. அந்த நேரத்தில் கம்பீர் உடன் பிரச்சினை என்று பேசப்பட்டது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து மௌனம் கலைத்துள்ள மனோஜ் திவாரி கூறுகையில் “நான் கேகேஆர் அணியில் இருந்த பொழுது கம்பீர் உடன் ஒரு பெரிய சண்டையில் ஈடுபட்டேன். ஆனால் அப்பொழுது வெளிச்சத்திற்கு வரவில்லை. 2012ஆம் ஆண்டு கேகேஆர் அணி கோப்பையை வென்ற பொழுது நெருக்கடியான நேரத்தில் நான் பவுண்டரி அடித்து வெல்ல வைத்து இருந்தேன். ஆனால் மேற்கொண்டு எனக்கு ஒரு வருடம் மட்டுமே அந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : “இங்கிலாந்து ஃபிளைட் ஏறலாம்.. வெத்து விளம்பரம் வேலைக்காகாது” – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம்

2013ஆம் ஆண்டு நான் கம்பீர் உடன் சண்டை போடாமல் இருந்திருந்தால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடியிருந்திருப்பேன். எனக்கு கொஞ்சம் விலையும் கூடுதலாக கிடைத்திருக்கும், என்னுடைய பேங்க் பேலன்ஸும் உயர்ந்திருக்கும். ஆனால் இது எல்லாம் தெரிந்ததுமே நான் கம்பீர உடன் சண்டையில் ஈடுபட்டேன்” எனக் கூறியிருக்கிறார்.