“விராட் கோலி கிடையாது.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்தான் இப்ப டாப்” – மைக்கேல் கிளார்க் தேர்வு

0
218
Clarke

ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான்கு பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தி வைத்திருப்பது வழக்கம். இதில் ரசிகர்கள் தங்களுக்கு ஏற்றது போல் அந்த வரிசையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

90கள் தாண்டி சச்சின் டெண்டுல்கர், பிரைன், லாரா ரிக்கி பாண்டிங் ஜாக் காலிஸ் என அந்தக் காலகட்டத்துக்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசைப்படுத்தப்பட்டார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்மித் மற்றும் ஜோ ரூட் இந்த காலகட்டத்திற்கு வரிசை படுத்தப்படுகிறார்கள். மேலும் இதில் ஐந்தாவதாக பாபர் அசாமையும் சேர்க்க வேண்டும் என்கின்ற பேச்சுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்திருந்தது.

இதில் இன்னொரு கருத்தாக மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் நான்கு சிறந்த வீரர்கள் என்று யாருமே கிடையாது. அந்த இடத்திற்கு ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார் அது விராட் கோலி என்று கூறக்கூடிய பலர் இருக்கிறார்கள்.

ஏனென்றால் மூன்று வடிவத்திலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக இந்த காலகட்டத்தில் விராட் கோலிதான் இருக்கிறார் என்பதும் உண்மை. மற்ற பேட்ஸ்மேன்கள் ஏதாவது இரண்டு அல்லது ஒரு வடிவத்தில்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இடம் இப்படியான நான்கு பேட்ஸ்மேன்களில் யாருக்கு முதலிடத்தை தருவீர்கள்? என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருக்கு முதலிடம்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “இது மிகவும் கடினமான கேள்வி. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என வரும் பொழுது நான் முதல் வீரராக ஸ்மித்தையே தேர்வு செய்வேன். அவர் எப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருப்பார்.

இதையும் படிங்க : “30 வயதான இந்திய வீரர்.. இவருக்கு பதிலாக வேற யாரையாவது தேடுங்க” – மஞ்ச்ரேக்கர் பேச்சு

இதற்கடுத்து நீங்கள் இரண்டாவது மூன்றாவது நான்காவது என மற்ற வீரர்களை வைத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதல் இடத்தில் இருக்கும் வீரர் யார் என்று கேட்டால் அது விராட் கோலிதான்” என்று கூறியிருக்கிறார்.