“30 வயதான இந்திய வீரர்.. இவருக்கு பதிலாக வேற யாரையாவது தேடுங்க” – மஞ்ச்ரேக்கர் பேச்சு

0
121
Bharat

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய தேர்வுக் குழு அணியை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது போட்டி வருகின்ற 13ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில், நேற்று நீதி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வுக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்பொழுது வரை அறிவிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் காயம் மற்றும் விராட் கோலி வருவாரா? என்பது குறித்தான சந்தேகங்கள் இருப்பதால் அணி தேர்வு செய்வதில் தாமதமாவதாக தெரிகிறது.

அதே சமயத்தில் இந்திய அணியில் பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. எனவே கே எல் ராகுல்மற்றும் விராட் கோலி அணிக்குள் திரும்ப வருவதாக இருந்தால் இவரது இடம் கேள்விக்குறியாகும்.

இவரது பேட்டிங் ஃபார்ம் மட்டுமில்லாமல் 30 வயதான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேஎஸ்.பரத் பேட்டிங் செயல்பாடு மோசமாகவே இருந்து வருகிறது. எனவே இவரை அணியில் வைத்துக் கொண்டே இரண்டாவது விக்கெட் கீப்பர் ஜூரலுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? இல்லைஇவருக்கே வாய்ப்பு தருவார்களா? புது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு செல்வார்களா? என்பது குறித்து தெரியவில்லை.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “கே.எஸ்.பரத் தனது முதல் தொடரை விளையாடுவது போல் விளையாடுகிறார். ரிஷப் பண்ட் எந்த நேரத்திலும் பணிகொள் வரலாம். எனவே இவர் மீது முதலீடு செய்வது அர்த்தமுள்ளதா என யோசித்துக் கொள்ள வேண்டும்.

இவர் சரியாக விளையாடாத காரணத்தினாலே இஷான் கிஷான் இடம் விலகி இந்திய நிர்வாகம் சென்றது. இப்பொழுது இஷான் கிஷான் இல்லாததால் இவரிடமே வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எல்லோருக்கும் நியாயமாக நடந்து கொள்ள பார்க்கிறது.

இதையும் படிங்க : “ரோகித் சர்மா தோனியின் இந்த ஐடியாவை ஃபாலோ செய்ய வேண்டும்.. அப்பதான் ரன் வரும்” – மஞ்ச்ரேக்கர் பேட்டி

ஆனால் ரிஷப் பண்ட் வந்து தன்னுடைய இடத்தை பிடிப்பதற்கு முன்னால் நான் வேறு ஒரு விருப்பம் இருக்கிறதா என்று பார்ப்பேன். பொதுவாக உலக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பு கொடுக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்திய அணி இந்த விஷயத்தை கண்டுகொள்ள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.