“இங்கிலாந்து அணிக்கு இந்த விஷயம் நல்லா தெரியும்.. நிச்சயம் ஜெயிப்பாங்க” – மைக்கேல் ஆதர்டன் பேச்சு

0
128
England

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன்படுத்தி இருக்கிறது.

இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல்.ராகுல், முகமது சமி, முகமது சிராஜ் என முக்கிய ஐந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி முதல் போட்டியில் தோல்விக்கு பின் இரண்டாவது போட்டியில் களமிறங்கி விளையாடி வெற்றி பெற்று இருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தனி ஒரு வீரராக நின்று பொறுப்பு எடுத்து இளம் வீரரான அவர் விளையாடுவது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

மேலும் தன்னுடைய கடைசி வாய்ப்பில் விளையாடிய கில் சதம் அடித்திருப்பதும் இந்திய அணிக்கு நல்ல விஷயம். மேற்கொண்டு தொடர்ந்து அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் தோல்வி பற்றி பேசி உள்ள ஆதர்டன் கூறும் பொழுது “இந்திய அணியில் பல முக்கிய வீரர்களை காணவில்லை. விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அடுத்த போட்டிக்கு வரலாம். ரவீந்திர ஜடேஜா தொடரில் இல்லை என்று நினைக்கிறேன். மேலும் முகமது சமியும் தொடருக்கு கிடைக்க மாட்டார் என்று தெரிகிறது.

இப்படியான நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவின் 20 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து கைப்பற்றியது. எனவே இங்கிலாந்து அணியில் சில வீரர்கள் தொடர் இன்னும் அவர்கள் பக்கம் இருப்பதாக நினைப்பார்கள்.

இந்தியாவிற்கு வந்து வெல்வது மிகவும் கடினமான ஒன்று. இந்தியா 10 வருடங்களுக்கு மேல் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. இங்கிலாந்துதான் கடைசியாக வென்று இருந்தது.

இதையும் படிங்க : “டீம்ல சொன்ன மாதிரி நான் விளையாடல.. டபுள் செஞ்சுரி அடிச்சது இப்படிதான்” – ஜெய்ஸ்வால் பேட்டி

எனவே இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு இங்கிலாந்து சோர்வடையும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் தொடரை கைப்பற்ற கூடிய இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று உணர்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.