“டீம்ல சொன்ன மாதிரி நான் விளையாடல.. டபுள் செஞ்சுரி அடிச்சது இப்படிதான்” – ஜெய்ஸ்வால் பேட்டி

0
255
Jaiswal

இந்திய டெஸ்ட் அணியில் பல முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தினால், ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக இளம் வீரர்கள் கொண்ட அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியை தோற்று இருந்த காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மீது அதிகபட்ச அழுத்தம் நிலவியது. இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறைக்கு எதிராக இந்தியா நல்ல திட்டத்துடன் வரவேண்டிய நெருக்கடி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் ஏமாற்றம் தந்தார்கள். இதனால் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி சிக்கல் மாட்டிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இளம் இடதுகை துவக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால் தனி ஒரு வீரராக நின்று 209 ரன்கள் குவித்து இந்திய அணியைக் காப்பாற்றினார். அதே சமயத்தில் முதல் போட்டி போல அதிரடியாக விளையாடாமல் பொறுமையாக விளையாடினார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் 171 ரன்கள் எடுத்தேன். அப்போது நான் அதை இரட்டை சதமாக மாற்ற நினைத்தேன் என்னால் முடியவில்லை. நான் என்னுடைய தினசரி வேலைகளை ஒழுங்காக செய்தால் எனக்கு ரன் வரும் என்று எப்பொழுதும் நம்புவேன்.

எனக்கு இந்த தினசரி செயல்முறை மற்றும் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. நான் என்ன சாப்பிடுகின்றேன்? நான் எப்பொழுது தூங்க வேண்டும்? நான் எப்படி பயிற்சி செய்கிறேன்? என்பது முக்கியமானது.

நான் இதையெல்லாம் மிகச் சரியாக செய்யும்பொழுது, களத்திற்குள் விளையாட போகையில் மிகவும் தன்னம்பிக்கையாக இருக்கும். ஏனென்றால் நான் எல்லாவற்றையும் சரியாக செய்திருக்கிறேன் என்கின்ற எண்ணம் என்னை நன்றாக விளையாட வைக்கும்.

இதையும் படிங்க : “பென் ஸ்டோக்ஸ் பேசிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.. ரூட் பாவம்” – இங்கிலாந்து லெஜன்ட் விமர்சனம்

நான் எப்பொழுதும் அணிக்காகவே விளையாட விரும்புகிறேன். கடந்த எல்லாவிதமான ஷாட்களும் விளையாட எனக்கு கூறப்பட்டிருந்தது.ஆனால் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, நிலைத்து நின்று கடைசி வரை விளையாடினால் பெரிய இன்னிங்ஸ் விளையாடலாம் என்று, அதற்கேற்றவாறுதான் விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -