“பும்ராவுக்கு ஸ்கெட்ச் நான் போட முடியாது.. ஆனா இதைத்தான் செய்ய முடியும்” – மெக்கலம் பேச்சு

0
402
Bumrah

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் பழைய முறைக்கே திரும்பி இருக்கிறது. அதாவது ஆடுகளம் ஒவ்வொரு நாளாக கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். முதல் நாளிலிருந்து பந்துவீச்சுக்கு சாதகம் இருக்காது.

இப்படியான நிலையில் தான் பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையைக் காட்டி ரன்கள் எடுக்க முடியும். போட்டியும் ஐந்தாவது நாளுக்கு செல்லும். ரசிகர்களுக்கு சிறப்பான கிரிக்கெட் விருந்து கிடைக்கும்.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகத்தில் இந்த முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர் பார்க்காத ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட எதிர்பார்க்காத ஒன்றாக பும்ரா பந்துவீச்சு இருந்து வருகிறது.

பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்களில் பும்ரா தனி வீரராக பதினைந்து விக்கெட் கைப்பற்றி, இந்தத் தொடரில் இதுவரையில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருக்கிறார். மேலும் இரண்டாவது போட்டியில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

இவரை சமாளிப்பதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்விதான் இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வியாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக முதல் போட்டியில் பெற்ற கடினமான வெற்றி வீணாகி இருக்கிறது.

- Advertisement -

பும்ராவுக்கு எதிராக என்ன திட்டம் இருக்கிறது என்று பேசி உள்ள மெக்கலம் கூறும் பொழுது “எங்களிடம் உண்மையில் எந்த தியரியும் கிடையாது. எங்கள் அணி வீரர்கள் தெளிவாகவும் அதே சமயத்தில் நம்பிக்கைவுடனும், அவரவர் விளையாடும் முறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எங்கள் அணி வீரர்கள் என்னைவிட சிறந்தவர்கள். எனவே அவர்கள் வழியை கண்டுபிடிப்பார்கள்.

நிலைமைகளைப் பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். இப்போது எங்களுடைய தொப்பியை கழட்டி உங்களுடைய ஸ்பெல் மிகச் சிறப்பாக இருந்தது என்று பும்ராவிடம் சொல்வதைதான் செய்ய முடியும்.

மேலும் இது எல்லாமே கண்டிஷனை பொறுத்தது. பந்தை அந்த அளவுக்கு அவர் ஸ்விங் செய்யும் பொழுது அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அற்புதமான பந்துவீச்சாளர்.

இதையும் படிங்க : “பும்ரா ஆண்டர்சன்.. ரெண்டு பேர்ல உலகின் தலைசிறந்த பவுலர் இப்ப இவர்தான்” – இங்கிலாந்து ஹார்மிஸன் தேர்வு

அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் நாங்கள் கடந்த 18 மாதங்களாக உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். நிச்சயம் இவருக்கு எதிராகவும் விளையாடும் வழிமுறையை கண்டறிந்து சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறியிருக்கிறார்.