“பும்ரா ஆண்டர்சன்.. ரெண்டு பேர்ல உலகின் தலைசிறந்த பவுலர் இப்ப இவர்தான்” – இங்கிலாந்து ஹார்மிஸன் தேர்வு

0
632
Harmison

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் இரண்டு போட்டிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆச்சரியத்தில் இன்னொரு ஆச்சரியமாக, இந்திய சூழ்நிலையில் டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்க, இந்தியாவின் பும்ரா மற்றும் இங்கிலாந்தின் ஆண்டர்சன் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிலாக மார்க் வுட்டை களமிறக்கி பென் ஸ்ட்ரோக்ஸ் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அந்த முடிவு நல்ல பலனை கொடுக்கவில்லை. மார்க் வுட் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களம் இறக்கப்பட்டு அவர் மொத்தம் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். 30 வயதில் பார்த்த ஆண்டர்சன் போல பந்துவீச்சில் தெரிந்தார்.

இந்திய தரப்பில் ஜஸ்பரித் பும்ரா இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 15 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

தற்பொழுது பூம்ரா பற்றி பேசி உள்ள இங்கிலாந்து முன்னால் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறும்பொழுது ” விசாகப்பட்டினத்தில் பும்ராவின் ஸ்பெல் நம்ப முடியாததாக இருந்தது. இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் அவர்தான் என்று நான் நினைக்கிறேன். அதேபோல் ஒரு மணி நேரத்தில் அவர் டக்கெட் மற்றும் ரூட் விக்கெட்டுகளை கைப்பற்றினார். நான் பார்த்ததில் அது மிகச் சிறந்த ஸ்பெல். அவரது திறமை அற்புதமானது.

மேலும் 41 வயது ஆண்டர்சன் மற்றும் பும்ரா இருவரும் இந்த தொடரில் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் வெளிநாட்டில் பெற்ற வெற்றிகளில் இங்கிலாந்து அணி 2012 ஆம் ஆண்டு இந்தியாவிலும், 2010 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றியும் மிகச்சிறந்த வெற்றிகள்.

இதையும் படிங்க : “ஆண்டர்சன் வாய்ப்பேச்சில் இந்திய வீரரிடம் மோத இனி வாய்ப்பே இல்லை.. வருத்தமா இருக்கு” – நாசர் ஹுசைன் கருத்து

இங்கிலாந்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தொடரிலும் அதை தொடர்வதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் கிடைத்த வெற்றி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.